வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே பெரிய பிரச்சனை இருக்கு!.. சந்துல சிந்து பாடிய பிரபலம்!..
இளையராஜாவின் இசை தான் எல்லாவற்றையும் விட சிறந்தது என்றும் இளையராஜா போட்ட பிச்சையால் தான் வைரமுத்து வளர்ந்தார் என வைரமுத்துவுக்கு நேரடியாகவே எச்சரிக்கை விட்டு கங்கை அமரன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபுவின் கோட் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடலை வைரமுத்துவின் மகன் மதன் கார்கி தான் எழுதியிருந்தார். அந்த அளவுக்கு வைரமுத்துவை இளையராஜா குடும்பத்தினர் ஒதுக்கி வைத்தாலும் மதன் கார்க்கிக்கு பட வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏமாந்த மக்களை ஏமாத்துறதுதான் சமூகநீதியா?.. விடுதலை 2 சம்பள பாக்கி.. வெற்றிமாறனை விளாசும் மக்கள்!..
அந்த காலத்தில் இளையராஜா வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் வைரமுத்து பெரிய ஆளாகவே ஆகியிருக்க முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை என வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய வீடியோவில் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
வைரமுத்து நல்ல பாடலாசிரியர் தான் என்றாலும் அவர் தான் இந்த சண்டையை தற்போது ஆரம்பித்துள்ளார். படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வேண்டுமென்றே ஞானி இல்லை அஞ்ஞானி என்றும் பாட்டுக்கு இசை முக்கியமா? அல்லது மொழி முக்கியமா? என்கிற விவாதத்தை கிளப்பி இளையராஜா குடும்பத்தையும் அவரது தம்பி கங்கை அமரனை கோபத்தில் ஆழ்த்தியதும் வைரமுத்து செய்த தப்பு தான்.
இதையும் படிங்க: கில்லி ரீ ரிலீஸ் குவித்த கலெக்ஷன்!.. தளபதியை சந்தித்து பிரபல தியேட்டர் ஓனர் பார்த்த வேலை!..
அவர் நேரடியாக பேசாமல் மறைமுகமாக இளையராஜாவை தாக்கி பேசினார். நான் வைரமுத்து பெயரை சொல்லியே அவரை வாயை மூடிக் கொண்டு இருக்க உத்தரவிடுகிறேன் என கங்கை அமரன் தடாலடியாக பேசியுள்ளார் என அந்தணன் பேசியுள்ளார்.
இருவருக்கும் இடையே சாதாரண பிரச்சனை கிடையவே கிடையாது. சாதாரண பிரச்சனை இருந்திருந்தால் இளையராஜா நிச்சயம் மன்னித்து இருப்பார். அவர் மன்னிக்க முடியாத அளவுக்கு வைரமுத்து பெரிய விஷயம் பண்ணியிருக்கணும் என அந்தணன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இருவரும் இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்தி விட்டு பேசிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இதற்கு மேல் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்த நினைத்தால் அது அவர்களுக்குத்தான் நல்லது கிடையாது என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பெண்கள் கல்லூரியில் அந்த வேஷத்தில் சென்ற விவேக்… காலேஜில் அவர் செய்த அட்டூழியங்கள்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms