Cinema News
வடிவேலுவுடன் 100 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பு! முடியவே முடியாது என மறுத்த நடிகை
Actor Vadivelu: தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண துணை காமெடி நடிகராக நடிக்க வந்தவர்தான் வடிவேலு. ஆனால் ஒரு நேரத்தில் வடிவேலு இல்லாத படங்களை பார்ப்பது என்பது அரிதாக இருந்தது. வைகைப் புயல் என்ற அடைமொழியால் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
தனக்கே உரிய பாணியில் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர். உடல் மொழியால் நகைச்சுவையை தெகட்ட தெகட்ட கொடுக்க கூடிய சிறந்த நடிகர்தான் வடிவேலு. சிறிது நாள்கள் அவர் நடிப்பில் இடைவெளி வர கிட்டத்தட 2 ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: 16 வயதினிலே படத்துக்கு முன் பாரதிராஜா இயக்கவிருந்த படம்!.. ஹீரோயின் யார் தெரியுமா?..
இப்பொழுது தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்த வடிவேலு சிறந்த குணச்சித்திர நடிகராகத்தான் அறியப்படுகிறார். இந்த நிலையில் வடிவேலுவுடன் நடிக்க 100 படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் முடியவே முடியாது என ஒரு நடிகை மறுத்திருக்கிறார்.
அவர் வேறு யாருமில்லை. பிரபல குணச்சித்திர நடிகை விஜி சந்திரசேகர். கிழக்கு சீமையிலே படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக படகு ஓட்டியாக வரும் நடிகைதான் அவர். அதன் பிறகு பல படங்களில் அம்மா நடிகையாக தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
இதையும் படிங்க: மனுஷனுக்கு கோபம் வராது! வந்தால் என்ன பண்ணுவார் தெரியுமா? அஜித்தை பற்றி காமெடி நடிகர் சொன்ன சீக்ரெட்
கடைக்குட்டி சிங்கம் படத்திலும் சத்யராஜுக்கு ஜோடியாக கார்த்திக்கு அம்மாவாக நடித்திருப்பார். கிழக்கு சீமையிலே படத்தில் பாரதிராஜா தனக்கு ராதாவுக்கு இணையான ரோல் என்று சொல்லித்தான் அழைத்தாராம். ஹீரோயின் மாதிரியான ரோல் என்ற ஆசையில் அங்கு போக வடிவேலுவுக்கு ஜோடியாக ஒரு காமெடி நடிகை கதாபாத்திரம் என்று தெரிந்திருக்கிறது.
உடனே விஜி சந்திரசேகர் கடும் அப்செட்டாகி விட்டாராம். ஏனெனில் தனக்கு நகைச்சுவையே வராது என்ற காரணத்தினால் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்? விலகி விடலாம் என நினைத்திருக்கிறார். இருந்தாலும் பாரதிராஜாவின் ஒரு ஃபிரேமிலாவது நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் படத்தில் நடித்தாராம்.
இதையும் படிங்க: அஜித் கழட்டிவிட்டா இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க!.. விக்னேஷ் சிவனுக்கு குடைச்சல் கொடுக்கும் பிரதீப்!..
இப்போது பாரதிராஜாவை பார்த்தாலும் எதுக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுத்தீங்க என கேட்பாராம். அதன் பிறகு வடிவேலுவுடன் நடிக்க 100 படங்களில் இருந்து வாய்ப்பு வந்ததாம். காமெடி செட்டாகாது என்ற காரணத்தினால் அந்தப் படங்களை எல்லாம் தட்டிக் கழித்திருக்கிறார் விஜி சந்திரசேகர்.