பைக்கையே தொடக் கூடாதுனு சொன்னவர் ஷாலினி! இப்போது அஜித்தை அவர் விருப்பப்படி விட என்னக் காரணம் தெரியுமா?

Published on: December 12, 2023
shalini
---Advertisement---

Actor Ajith: இன்று கோலிவுட்டில் கண்படும் அளவிற்கு ஒரு மகிழ்ச்சியான நட்சத்திர தம்பதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் –  ஷாலினிதான்.இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

அமர்க்களம் படம் ரிலீஸான பிறகு இவர்கள் திருமணம் நடந்தது. கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழித்து கொண்டு வருகின்றனர். ஷாலினி குடும்பத்தை கவனித்துக் கொண்டிருக்க அஜித் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் என்னை பார்க்க வராதேனு சொல்லிட்டாரு! கேப்டன் சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா?

அஜித்திற்கு ஒரு பக்கபலமாக முதுகெலும்பாக இருப்பது ஷாலினிதான் என பல பிரபலங்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். ஏன் சில சமயங்களில் துவண்டிருக்கும் போது அஜித்துக்கு ஆறுதல் கூறி அவரை தேற்றுவதும் ஷாலினிதானாம்.

இந்த நிலையில் சித்ரா லட்சுமணன் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார். முதலில் பைக்கயே தொடக் கூடாது என ஷாலினி அஜித்திற்கு கண்டீசன் போட்டாராம். அந்த நேரத்தில் பல விபத்துக்களை அஜித் சந்திக்க படங்களின் வாய்ப்பும் குறைய தொடர்ங்கியது. அட்வான்ஸ் கொடுத்தவர்கள் எல்லாம் பணத்தை திரும்ப வாங்க கடன்களிலும் சிக்கினாராம் அஜித்.

இதையும் படிங்க: இந்த புள்ளபூச்சிய சீக்கிரம் மாட்டி விடுங்கடா கடுப்பாகுது… மனோஜால் காண்டாகும் ரசிகர்கள்..!

அப்போது ஷாலினிதான் நமக்கு என்ன தொழிலோ அதில் முதலில் கவனம் செலுத்துவோம். அதன் பிறகு மற்றவற்றை பார்த்துக் கொள்ளலாம் என்ற நல்ல யோசனையை கூறியிருக்கிறார். அஜித்தும் ஷாலினியின் வார்த்தைக்கு  மதிப்பு  கொடுத்து சில காலம் பைக் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.

அதன் விளைவுதான் இப்போது 150 கோடி சம்பளம் வாங்கும் ஒரு பெரிய நடிகராக அஜித் வளர்ந்து நிற்கிறார். அதனால்தான் அஜித்தின் இனிவரும் முயற்சிக்கு தடைபோடாமல் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் ஷாலினி. இருவருக்குள்ளும் ஒரு சரியான புரிதல் இருக்கிறதனால்தான் இன்றுவரை அவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.

இதையும் படிங்க : ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.