Connect with us

latest news

இந்த புள்ளபூச்சிய சீக்கிரம் மாட்டி விடுங்கடா கடுப்பாகுது… மனோஜால் காண்டாகும் ரசிகர்கள்..!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் முத்து தூக்கம் வராமல் மொட்டை மாடியில் உலாவி கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பாகி மீனாவை போய் அழைத்துக்கொண்டு மாடிக்கு கூட்டி சென்று விடுகிறார். ரெண்டு பேரும் மாடியில் உட்கார்ந்து ஹாயாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அதையடுத்து காலையில் விஜயா சமையலறைக்கு வருகிறார். இதனை அடுத்து மீனாவிடம் டீ வாங்கிக்கொண்டு விஜயா கிளம்ப எதோ சொல்ல வரும் மீனாவின் வாயை அடைத்து விடுகிறார். ரூமுக்குள் ரவி துணி மடித்துக்கொண்டு இருக்க ஸ்ருதி ஏங்கே என்கிறார். அவ கிளம்பிட்டா என ரவி கூற ஏன் எதுவும் சண்டையா என்கிறார். ரவி இல்லை, இல்லை அவளுக்கு வொர்க் வந்துச்சு அதுக்கு போயிட்டதாக சொல்கிறார்.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காம ரஜினி நடிச்ச படம்!.. இனிமே அப்படி ஒரு பாட்டு அமையவே அமையாது!..

இது என்ன பழக்கம் வீட்டில் நான் ஒரு பெரிய மனுஷி இருக்கேன். சொல்லாம போலாமா எனத் திட்டிவிட்டு வெளியில் செல்கிறார். உடனே காபியை வைத்து விட்டு அண்ணாமலையிடம் ஸ்ருதி பற்றி குறை கூறிக்கொண்டு இருக்கிறார். அங்கு வரும் ரோகினி காபியை எடுத்து நானே கேட்கணும் இருந்தேன் எனக் கூற அது ஸ்ருதிக்கு போட்டதாக கூறுகிறார். இதனால் ரோகினிக்கு பல்ப் ஆகிவிடுகிறது.

அதையடுத்து ஸ்ருதி சொல்லலையா என மீனா கேட்க இல்லை இல்லை இங்கிலீஷில் சொன்னா என சமாளிக்கிறார். ஆனால் மீனா என்கிட்ட சொன்னாங்க. அத்தைக்கிட்ட சொல்லலை நீங்க சொல்லிடுங்க எனக் கூறிவிடுகிறார். இதனால் விஜயா மொக்கை வாங்க அந்த இடத்தினை காலி செய்து விடுகிறார்.

பின்னர் சமையலறைக்கு வரும் முத்து சோப்பு கேட்க மீனா கொடுத்து விட்டு கீழே போய் குளிக்க சொல்கிறார். இரண்டு, மூணு நாளைக்கு அங்கே போக வேண்டாம்னு அத்தை சொன்னதாக சொல்கிறார். நீ எங்க குளிச்ச எனக் கேட்க கீழ் பாத்ரூமில் என்கிறார்.

இதையும் படிங்க: ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

ஆமா என்கிட்ட சொல்லிட்டு தான் போனாரு என்கிறார். எல்லாரும் உடனே விஜயாவை பார்க்க அட உண்மை தான் என்கிறார். அங்கு வரும் முத்து தனக்கு இட்லியை தரச்சொல்லி ஹாலில் அவசரமாக சாப்பிடுகிறார். அதை பார்த்த மனோஜ் இவன் கார் ஓட்டத்தானே போறான். என்ன இந்த அவசரம் என்கிறார்.

ஆமா நீ கார் ஷோரூமில் வேலை செய்ற உனக்கு எவ்வளோ க்ளையண்ட் இருப்பாங்க. நீ தான் சீக்கிரம் போகணும் என்க மனோஜும் தலை ஆட்டுகிறார். இதனை விஜயா நக்கலாக பார்ப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top