Connect with us

Cinema News

ஹனிமூன் டூர் ஸ்டார்ட்!.. புதுமாப்பிள்ளை ரெடின் கிங்ஸ்லி மனைவியோட செம மஜா பண்றாரே!..

மைசூர் சாமுண்டேஸ்வரி கோயிலில் எளிமையான முறையில் தனது திருமணத்தை செய்துக் கொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி தற்போது தனது மனைவியுடன் ஹனிமூன் டூர் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபரான ரெடின் கிங்ஸ்லிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை ஏற்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் உடன் இணைந்து கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் மற்றும் ஜெயிலர் என தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் புதிய காமெடியனாக கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: வாவ்!.. திவ்யா பாரதியை இப்படி பார்த்துட்டா இன்னைக்கு நைட் தூங்கமாட்டீங்க!.. போட்டோ பாருங்க!..

சந்தானம், யோகி பாபு படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அடுத்ததாக கவின் படத்தில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திடீரென திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கின.

கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் தற்போது திருமணம் செய்துக் கொள்ள சங்கீதா விரும்பிய நிலையில், எளிமையாக திருமணம் செய்துக் கொண்டோம் என ரெடின் கிங்ஸ்லி தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: ஹெவியா ஜெயிலர் வாடை வருதே!.. வேட்டையன் இன்ட்ரோ டீசரை பங்கமா கலாய்க்கும் தளபதி ஃபேன்ஸ்!

இந்நிலையில், எளிமையாக திருமணம் முடிந்த நிலையில், தற்போது  சொகுசு ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. தனது மனைவி சங்கீதாவுடன் அந்த ரெசார்ட்டில் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோக்களை பதிவிட்டு தங்கள் திருமணத்துக்கு வாழ்த்து சொல்லிய பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய திருமண ஜோடியை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர். கூடிய விரைவிலேயே சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி பலருக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் ரெடின் கிங்ஸ்லி.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top