Connect with us

Cinema News

ஹெவியா ஜெயிலர் வாடை வருதே!.. வேட்டையன் இன்ட்ரோ டீசரை பங்கமா கலாய்க்கும் தளபதி ஃபேன்ஸ்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படம் தலைவர் 170 என இதுவரை அழைக்கப்பட்டு வந்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

வேட்டையன் என அந்த படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்ட்ரோ டீசரில் தாறுமாறாக நடந்து வந்து துப்பாக்கியை எடுத்து எதிரிகளை சுட்டுத் தள்ளுவது போல ரஜினி பேசும் மாஸ் வசனத்துடன் டீசர் வெளியான நிலையில், அனிருத், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைவரு செம மாஸ்!.. வெளியானது லால் சலாம் வீடியோ!.. ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!..

லியோ படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஈவு இரக்கமின்றி அடித்து வெளுத்த நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்றும் சும்மா விடாமல் வேட்டையன் படத்தின் டைட்டிலை பார்த்து விட்டு வேட்டைக்காரன், வேட்டையாடு விளையாடு என கலாய்த்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ஜெயிலர் படத்தின் சாயல் அப்படியே வேட்டையன் படத்தில் உள்ளதாகவும் ஜெயிலர் படத்தின் வாடை அடிக்குதே என்றும் ஜெயிலர் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து கொடுத்து விட்டார்களா என விஜய் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி தனது கார் நம்பரை எப்படி செலக்ட் பண்ணுவார் தெரியுமா?.. தலைவரு செம உஷாரு!..

இதுவெறும் அறிமுக டீசர் தான் என்றும் ஜெயிலர் அறிமுக டீசருக்கும் படத்துக்கும் எப்படி சம்மந்தம் இல்லாமல் இருந்ததோ அதே போல இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுன்ட்டர் போலீஸாக நடித்து வருகிறார் என்றும் கண் தெரியாதவராக நடிக்கிறாரா என்றும் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top