Connect with us
rajini

Cinema News

ரஜினி தனது கார் நம்பரை எப்படி செலக்ட் பண்ணுவார் தெரியுமா?.. தலைவரு செம உஷாரு!..

Rajini: திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு சொகுசு கார்களை வைத்திருப்பார்கள். சினிமாவில் நடிக்க துவங்கும்போது நாமும் ஒரு கார் வேண்டும் என சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் கலைஞர்கள் நினைப்பார்கள். சிலருக்கு கார் வாங்குவதே ஒரு கனவாக இருக்கும்.

நடிகரோ, இயக்குனரோ முதல் படத்தில் கிடைக்கும் சம்பளத்தில் அவர்கள் முதலில் வாங்குவது ஒரு கார்தான். அதன்பின்னர்தான் வீடு வாங்குவது பற்றி யோசிப்பார்கள். சில சின்ன கலைஞர்கள் ஏற்கனவே பயன்படுத்திய காரை கூட வாங்குவார்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களிடம் விலையுயர்ந்த சொகுசு கார்கள் நிறையவே இருக்கும்.

இதையும் படிங்க: ரஜினிக்காக எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல்!.. பெண்டு கழட்டிய இளையராஜா..

பெரும்பாலும் பி.எம்.டபிள்யூ கார்களை வைத்திருப்பார்கள். விஜயிடம் பி.எம்.டபிள்யூ மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் காரையும் வைத்திருக்கிறார். சில நடிகர்களுக்கு காரின் மீது அதிக ஆர்வம் இருக்கும். நடிகர் கவுண்டமணி 10 கார்களை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சொகுசு கார்கள் வாங்குவது போலவே காருக்காண எண்ணையும் தங்களுக்கு பிடித்தது போல வாங்குவார்கள். அதற்கு பல ஆயிரங்களையும் செலவு செய்வார்கள். இது எல்லோரும் செய்வதுதான். அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கூட அப்படித்தான் வாங்குவார்கள். ஆனால், நடிகர்கள் இதை அதிகமாக செய்வார்கள்.

rajini car

ஆனால், இது ரஜினி மட்டும் விதிவிலக்கு.  அவர் முதன் முதலாக வாங்கிய காரின் எண் 5004. ஆனால், பிரபலமான பின் தன்னுடைய கார் எண் இதுதான் என தெரிந்துவிட்டால் எங்கு சென்றாலும் ரசிகர்களால் தொந்தரவு ஏற்படக்கூடாது என நினைப்பாராம். அதனால், சுலபமாக மனப்பாடம் ஆகாத படியே எண்களை தேர்வு செய்வாராம். இதுவரைக்கும் அவர் வாங்கிய எல்லா கார்களுக்கும் அப்படித்தான் எண்களை வாங்குவாராம்.

தலைவரு செம உஷார்தான்!..

இதையும் படிங்க: ரஜினி தன் வாழ்க்கையில் வாங்கிய முதல் சம்பளம்!.. அத எப்படி செலவு செய்தார் தெரியுமா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top