Connect with us

Cinema History

தலைவரு செம மாஸ்!.. வெளியானது லால் சலாம் வீடியோ!.. ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா!..

lal salaam: திரையுலகை பொறுத்தவரை எப்போதும் நிரந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. 35 வருடங்களுக்கும் மேல் அவரிடம் மட்டுமே அந்த பட்டம் இருக்கிறது. அவருக்கு பின் பல நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.

அவரின் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஜெயிலர் படம் அதை ஈடுகட்டி விட்டது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் வசூல் செய்யாத வசூலை இப்படம் நிகழ்த்திவிட்டது. இப்படத்தின் வசூல் ரூ.700 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினி தனது கார் நம்பரை எப்படி செலக்ட் பண்ணுவார் தெரியுமா?.. தலைவரு செம உஷாரு!..

ஜெயிலர் பட வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் ரஜினி இப்போது ஜெய்பீம் பட இயக்குனரின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜெய்பீம் படம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த படமும் சமூகபிரச்சனைகளை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைக்கு ரஜினி பிறந்தநாள் என்பதால் அவர் நடித்து வரும் புதிய படங்களின் போஸ்டர்களும், வீடியோக்களும் வெளியாகி வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் 170வது படத்தின் தலைப்பு வீடியோ வெளியானது. இப்படத்தின் தலைப்பு வேட்டையன் என வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்தின் ஸ்பெஷல் வீடியோ மற்றும் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. தனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்களுக்காக ஐஸ்வர்யா இவற்றை வெளியிட்டுள்ளார். லால் சலாம் படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருக்கிறார்.

lal salaam

ஆனாலும், ரஜினி என்பதால் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு அதிரடி சண்டை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. அந்த காட்சியில் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in Cinema History

To Top