Connect with us
rajini

Cinema News

சம்பவம் லோடிங்! அடிபட்ட பாம்பு சும்மா விடுமா? வெளியான ‘ரஜினி 171’ படத்தின்புதிய அப்டேட்

Rajini171:  நேற்று ரஜினி தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ரஜினியின் வீட்டின் முன் தவமாய் கிடந்து பரிதவித்துப் போனார்கள். அதில் ஒரு ரசிகர் தலைவா வெளியே வா.. இல்லையெனில் இங்கேயே கிடந்து செத்து விடுவேன் என்று அழுத குரலில் கத்திக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு சில மணி நேரங்களில் ரஜினி உள்ளே இருந்து வந்து ரசிகர்களை சந்தித்து கை குலுக்கி சென்று வாழ்த்துக்களை பெற்றுச்சென்றார். அதுமட்டுமில்லாமல் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பையும் நேற்று லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படிங்க : என்னது பிக்பாஸ் மாயா கமலுக்கு உறவினரா? இதுனாலதான் அம்மணி எஸ்கேப் ஆகிட்டே இருக்காரா?

வேட்டையன் என அந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஊரெங்கிலும் ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் ஆரவாரமாக இன்றுவரை கொண்டாடி வருகிறார்கள். ஒரு பக்கம் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்தாலும் அடுத்ததாக லோகேஷுடன் இணையும் படத்தின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கமல், விஜய், கார்த்தி இவர்களை வைத்து ஒரு தரமான சம்பவத்தை செய்து லோகேஷ் ரஜினியை வைத்தும் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். அவரின்  இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படத்தில் ஆங்காங்கே சில குளறுபடிகள் இருந்தன. அதனால் பல விமர்சனங்களுக்கும் ஆளானார் லோகேஷ்.

இதையும் படிங்க: ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…

இந்த நிலையில் ரஜினி – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ரஜினியின் 171வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினி நெகட்டிவ் பிம்பம் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு மல்டி ஸ்டாரர் படமாக இருக்கப் போகிறதாம். அதற்காக எல்லா மொழிகளில் இருந்தும் நடிகர்களை கொண்டு வர இருக்கிறாராம். சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்தில் ஒரு வெயிட்டான ரோல் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விசுவுக்கு ஏவிஎம் நிறுவனம் கொடுத்த மிகப்பெரிய கௌரவம்!.. மனுஷன் வாழ்நாள் முழுக்க மறக்கலயாம்!..

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top