Connect with us
rajini

Cinema News

ரஜினி, கமல், அமிதாப் இணைந்து நடித்த ஒரே படம்!.. அட அது அந்த படத்தோட ரீமேக்!…

திரையுலகை பொறுத்தவரை பெரும்பலான ஹீரோக்கள் தனி ஹீரோவாக நடிக்கத்தான் ஆசைப்படுவார்கள். ஏனெனில், அப்போதுதான் ரசிகர்களின் கவனம் தன் மீது மட்டுமே இருக்கும் என நினைப்பார்கள். அது உண்மையும் கூட. எம்.ஜி.ஆர் கூட சிவாஜியுடன் கூண்டுக்கிளி என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார்.

அதன்பின் இருவரும் வெவ்வெறு பாதையில் பயணித்தனர். அந்த ஈகோ எல்லா ஹீரோக்களுக்கும் இருக்கும். குறிப்பாக தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு அது மிகவும் அதிகம் ஜெய்யை போன்ற சின்ன நடிகர் கூட அப்படித்தான் நடிக்க ஆசைப்படுவார்கள். ஹீரோ என்பதை யாரும் பங்கு போடக்கூடாது என்பது அவர்களின் எண்ணம்.

இதையும் படிங்க: ரஜினி பட இயக்குனரை அழவைத்த பாலச்சந்தர்!.. ஆனாலும் இவ்வளவு கோபம் வரக்கூடாது!..

பிதாமகனில் சூர்யாவுடன் இணைந்து நடித்த விக்ரம் ‘இது பாலாவுக்காக செய்தது. இனிமேல் ஹீரோ மட்டுமே’ என பேட்டியே கொடுத்தார். அதன்பின் அவர் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். கமல் நடிக்க துவங்கிய புதிதில் ரஜினி உள்ளிட்ட பலருடனும் நடித்தார். சின்ன சின்ன வேடங்களில் வருவார். ஆனால், ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஆனால், அதே கமல் விக்ரம் படத்தில் பஹத் பாசில், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்தார்.

ரஜினி கடந்த பல வருடங்களாகத்தான் தனி ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால், அவர் சினிமாவில் நடிக்க துவங்கி 10 வருடங்களில் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அவர் அதிகம் இணைந்து நடித்தது கமலுடன் மட்டுமே. ஹாலிவுட் நடிகருடன் இணைந்து பிளட் ஸ்டோன் என்கிற படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: ரஜினி தனது கார் நம்பரை எப்படி செலக்ட் பண்ணுவார் தெரியுமா?.. தலைவரு செம உஷாரு!..

ஹிந்தியில் சில நடிகர்களுடன் இணைந்து ரஜினி நடித்திருக்கிறார். அதில் அமிதாப்பச்சனும் ஒருவர். அதேநேரம், ரஜினி, கமல், அமிதாப்பச்சன் ஆகிய மூவரும் இணைந்து ஒருபடத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?. ஆனால், அது உண்மையில் நடந்தது.

ரஜினி 3 வேடங்களில் நடித்து 1982ம் வருடம் வெளியான படம் மூன்று முகம். இதே படம் ஹிந்தியில் ஜான் ஜானி ஜனார்த்தன் என்கிற பெயரில் உருவானது. இதில்தான் ரஜினி, கமல், அமிதாப்பச்சன் ஆகிய மூவரும் இணைந்து நடித்தனர். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக ரஜினி நடித்தார்.

இதையும் படிங்க: ரஜினிக்காக எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல்!.. பெண்டு கழட்டிய இளையராஜா..

google news
Continue Reading

More in Cinema News

To Top