முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜ் வைத்த டயலாக் பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா..?

Published on: December 14, 2023
---Advertisement---

Bhagayaraj: பாக்கியராஜ் படத்தில் வசனம் எல்லாமே இயல்பாக இருக்கும். அவரின் வாழ்க்கை அசால்டாக சொல்லி விட்டு செல்வார். அப்படி ஒரு முறை முந்தானை முடிச்சு படத்தில் அவர் வைத்த ஒரு டயலாக்குக்கு பின்னாடி ஒரு காரணமே இருக்கிறதாம்.

பாரதிராஜாவின் ஆஸ்தான உதவி இயக்குனராக இருந்தவர் பாக்கியராஜ். அவரின் சில படங்களின் திரைக்கதை கூட எழுதி இருக்கிறார். அதையடுத்து பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் ஹீரோவானார். அதை தொடர்ந்து அவரும் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

இதையும் படிங்க: அஜித்துடன் சேர்ந்து போட்டோதானய்யா எடுத்தேன்! மூட்டைக் கட்டி மொத்தமா வழியனுப்பி வைத்த ‘விடாமுயற்சி’ டீம்

தொடர்ச்சியாக அவர் இயக்கிய எல்லா படங்களுமே ஹிட் ரகமாக அமைந்தது. அதை தொடர்ந்து 1983ம் ஆண்டு முந்தானை முடிச்சு படத்தினை இயக்கினார். இப்படத்தினை ஏவிஎம் ப்ரோடக்‌ஷன் தயாரித்தது. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

ஊர்வசியின் அக்கா தான் முதலில் நாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் அவர் வயது அதிகமாக தெரிந்ததால் அவருடன் வந்த தங்கை ஊர்வசியை பாக்கியராஜ் ஓகே செய்து நடிக்க வைத்தாராம். இப்படத்தில் எஸ்.எஸ்.சௌந்தர், பயில்வான் ரங்கநாதன், தீபா, கோவை சரளா என பலரும் நடித்திருந்தனர். 

இதையும் படிங்க: கடுப்பான பிக்பாஸ் டீம்.. மிட் வீக் எவிக்‌ஷனில் ஒரு ஆடு காலி… யாரு தெரியுமா?

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் சீரியலில் தனமாக வந்த நடிகை சுஜிதா நடித்திருப்பார். இப்படத்திற்காக ஏவிஎம் நிறுவனத்திடம் 2 மணிநேரம் 45 நிமிடம் கதை சொல்லி இருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் அதிக வசூல் செய்த திரைப்படம் இது தான் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இடைவேளை சீனுக்காகவே பல பெண்கள் தியேட்டருக்கு வந்தனராம். இந்த படத்தில் குரு துரோகிகளா என்ற ஒரு டயலாக்கை பாக்கியராஜ் வைத்து இருப்பார். அதற்கு காரணம் அந்த சமயத்தில் தான் அவரின் முக்கிய உதவி இயக்குனர்களான பாண்டியராஜன், ஜி.எம்.குமார் ஆகியோர் பிரிந்து சென்றனராம். அதனாலே தான் அந்த டயலாக்கை வைத்தாராம்.

இதையும் படிங்க: கோலாகலமாக கொண்டாடிய நெப்போலியன் பிறந்தநாள்! சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு பறந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.