அந்த நடிகையுடன் நெருக்கமான காட்சிகள்!. அடம்பிடித்த தனுஷ்!.. ஐஸ்வர்யா பிரிஞ்சதுக்கு இதுதான் காரணமாம்!

Published on: December 15, 2023
dhnaush
---Advertisement---

Dhanush aishwarya: துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அண்ணன் செல்வராகவனால் வளர்ந்தவர் இவர். காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.

தனுஷ் வாழ்வில் நடந்த முக்கியமான 2 விஷயங்கள் ரஜினி மகளை அவர் திருமணம் செய்தது மற்றும் அவரை பிரிந்ததுதான். ஐஸ்வர்யா தனுஷை பிரிய முடிவெடுத்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தனுஷோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் அமலாபால்.

இதையும் படிங்க: தனுஷ் கதை சொன்னப்போ அசால்ட்டா நினைச்சேன்.. ஆனா ரிலீஸில் நானே ஷாக் ஆகிட்டேன்.. சுவாரஸ்யம் சொல்லும் நடிகை..!

அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டபோது திருமணத்திற்கு பின் நடிக்க கூடாது என அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால், அம்மா கணக்கு என்கிற கதையில் அவரை நடிக்க வைத்து அப்படத்தை தயாரித்தார் தனுஷ். அதோடு, தனுஷ் – அமலாபால் இருவரும் நெருங்கி பழகியதாகவும் சொல்லப்பட்டது. இது ஏ.எல்.விஜய் குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்த அமலாபாலை ஏ.எல்.விஜய் பிரிந்தார்.

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவதை அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்தார். எனவே, அதற்கும் இதற்கும் முடிச்சி போட்டு கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுடன் மிகவும் நெருக்கமான காட்சிகளை வைக்க சொன்னார் தனுஷ்.

இதையும் படிங்க: தனுஷ் படங்கள் இத்தனை கோடி வசூல் செய்கிறதா?!. இது தெரிஞ்சா சம்பளத்த ஏத்திடுவாரே!..

அவர் சொன்னது வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அப்படத்திற்கு தனுஷும் ஒரு தயாரிப்பாளர் என்பதால் சம்மதித்திருக்கிறார். ஆனால், எடிட் செய்யும்போது இவ்வளவு நெருக்கமான காட்சிகள் வேண்டாம் என நினைத்து சில காட்சிகளை வெற்றிமாறன் வெட்டிவிட்டார். ஆனாலும் லிப்லாக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தது.

அதோடு, ஐஸ்வர்யா ராஜேஷுடன் தனுஷ் நெருங்கிய பழகியதாக சொல்லப்படுகிறது. இதை ஐஸ்வர்யா கண்டித்தும் தனுஷ் கேட்கவில்லை என்பதால்தான் அவரை பிரிய ஐஸ்வர்யா முடிவெடுத்தார் என சொல்லப்படுகிறது. இந்த தகவலை சினிமா பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.

வித்தகன் சேகர் பேசிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

https://www.youtube.com/watch?v=o7wOZutQCnM

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.