ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…

Published on: December 15, 2023
vadivelu
---Advertisement---

மதுரையை சேர்ந்த வடிவேலுவுக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம். சினிமாவில் சுலபமாக நுழைய முயன்ற அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் நடிகர் ராஜ்கிரண். அவரின் அலுவலகத்தில் எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் என் ராசாவின் மனசிலே படத்தை தயாரித்து, நடிப்பது என முடிவானது.

அந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது அவர் மீது இரக்கப்பட்ட ராஜ்கிரண் கவுண்டமணியுடன் சில காட்சிகளில் அவரை நடிக்க வைத்தார். அதன்பின் சிங்கார வேலன், சின்ன கவுண்டர், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து தன்னை வளர்த்துகொண்டார்.

இதையும் படிங்க: மிஸ் ஆன ‘23ஆம் புலிகேசி’ பட வாய்ப்பு! வடிவேலுக்கு முன் நடிக்க இருந்த நடிகர் இவர்தான் – ஐய்யோ விட்டுடீங்களே

ஒருகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். வைகைப்புயல் என்கிற அடைமொழியோடு சினிமாவில் கலக்கினார். இவரின் காமெடிகள் ரசிகர்களை கவர்ந்ததால் பல திரைப்படங்களிலும் நடித்து கோடீஸ்வரனாக மாறினார். ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் எல்லாம் இவர் சம்பளம் வாங்கினார்.

ஆனால், சினிமாவில் ரசிகர்களை சிரிக்க வைத்தாலும் நிஜவாழ்வில் அவரின் சுபாவம் அடாவடிதான். தன்னால்தான் திரையுலகமே இயங்குகிறது என நினைத்த வடிவேலு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கதற விட்டார். அப்படி நடிக்க மாட்டேன்.. இப்படி நடிக்க மாட்டேன் என பேச துவங்கினார். படப்பிடிப்புக்கு தாமதமாகவே செல்வார். ஒரிரு காட்சிகளில் நடித்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

ஒருகட்டத்தில் எல்லோரும் இவரை ஒதுக்கிவிட 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதன்பின் மீண்டும் நடிக்க வந்தாலும் அவரின் காமெடிகள் எடுபடவில்லை. கார்த்திக் நடித்த தெய்வ வாக்கு படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்களுக்கு சிகரெட்டும் தயாரிப்பாளர் செலவில் கொடுக்கப்படும்.

vadivelu

வடிவேலு தயாரிப்பு நிர்வாகியிடம் ‘எனக்கு ஒரு சிகரெட் வேணும்’ என கேட்க, அவர் தயாரிப்பாளருக்கு போன் செய்து வடிவேலு சிகரெட் கேட்கிறார் வாங்கி கொடுக்கட்டுமா? என அனுமதி கேட்க, தயாரிப்பாளர் வடிவேலுவை போனில் தொடர்பு கொண்டார். அப்போது வடிவேலு ‘அண்ணே நான் பீடி மட்டும்தான் குடிச்சிருக்கேன். சிகரெட் குடிச்சதே இல்லை. அதான் ஆசையா கேட்டேன். வாங்கி கொடுக்கலனா விட்ருங்க’ என சொல்லிவிட்டார். வடிவேல் சொன்னதில் ஃபீல் ஆன தயாரிப்பாளர் அவருக்கு சிகரெட்டை வாங்கி கொடுக்க சொன்னாராம்.

இதையும் படிங்க: வடிவேலுவை திட்ட பயந்து நின்ன துணை நடிகர்! பார்த்திபன் சொன்ன டிரிக் – இந்த சீன் இப்படித்தான் உருவாச்சா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.