Cinema History
நடிகர் திலகத்தையே டென்ஷனாக்கிய வைகைப்புயல்… படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..
கமல், சிவாஜி நடிப்பில் 1992ல் வெளியான அருமையான படம் தேவர்மகன். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் எல்லாமே அற்புதமா இருக்கும். கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன் என பலரும் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் வடிவேலுவின் நடிப்பு செம மாஸாக இருக்கும். வழக்கமான காமெடியன் கிடையாது. மாறாக அவர் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்து இருப்பார்.
இந்தப்படத்திற்குப் பிறகு வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்திற்குச் சென்றது. அவரது நடிப்புக்கு பலதரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுதல்கள் கிடைத்தன. இந்தப்படத்தின்போது நடந்த சில சுவையான தருணங்களைப் பற்றி சொல்கிறார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சிகரெட் கேட்டு கெஞ்சிய வடிவேலு.. அப்படி வளர்ந்தவர்தான் இப்போ இப்படி!…
தேவர் மகன் படம் நான் சினிமாவுக்கு வந்த புதுசு. அப்ப சூப்பரா நடிக்கணும்னு ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப்படத்தில் கமலோட அப்பா சிவாஜி இறந்து போய் விடுவார். பக்கத்தில் குழந்தைகள்… கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும் இருப்போம்.
கமல் சார் கொஞ்சம் தூரத்தில் இருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம் தத்ரூபமா அழணும்னு சொல்வார். ஷாட் ரெடின்னு சொன்னாங்க. உடனே நான் ஐயோ எங்களை விட்டுப் போயிட்டீங்களே அய்யா… ஐயா…ன்னு கத்தி அழ ஆரம்பிச்சிட்டேன்.
இதையும் படிங்க: வடிவேலுவுடன் 100 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பு! முடியவே முடியாது என மறுத்த நடிகை
பேசி கொஞ்ச நேரம் கூட ஆகல. கட் கட் னு சொன்னது பிணம். சிவாஜி சார் தான்… என்னைப் பார்த்து இங்க வாடா… என்றார் முறைத்தபடி. நானும் பயந்தபடி வந்தேன். நீ ஒருத்தன் அழுதா போதுமாடா… மத்தவன் யாரும் அழ வேண்டாமா…? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா தான் அழறான்… நீ ஏன்டா ஊரையேக் கூட்டுற…
நீ கத்துற கத்துல உன் உசுரும் போயிடப்போகுதுன்னு சொன்னாரு. அது மட்டும் இல்லாம துண்டை வாயில் வெச்சிக்கிட்டு கமுக்கமா விசும்பி அழு. அது போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதை படுவே படுவான்னு சொன்னார். அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வருது’ என வடிவேல் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…