திடீரென வீட்டிற்குள் போகும் கமல்! பிக்பாஸில் நடந்த அதிரடியான சம்பவம் – கதிகலங்கிய போட்டியாளர்கள்

Published on: December 17, 2023
kamal
---Advertisement---

Biggboss Season 7: விஜய் டிவியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை இல்லாத அளவுக்கு பிக்பாஸின் இந்த சீசன் மக்களின் வெறுப்பை அதிகளவே சம்பாதித்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கமலையும் நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். கமல் மாயாவிற்கே சப்போர்ட் பண்ணி பேசுவது போலயே தெரிவதாகவும் சமூக வலைதளங்களில் கமலை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஆனால் அது உண்மைதான் போல என்று சில சமயங்களில் பார்க்கும் ரசிகர்களை நினைக்க வைக்கின்றது.

Also Read

இதையும் படிங்க: சைனிங் அழகை பாத்தாலே மூடு மாறுது!.. சண்டே ஃபுல் ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா…

கமல் பேசும் போது மாயா எப்பொழுதுமே சிரித்துக் கொண்டே மழுப்பி விடுகிறார். கமல் சில சமயங்களில் மாயா செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் அதை பெரிதாகவே அவர் காட்டிக் கொண்டதே இல்லை. அதனால் இந்த சீசனில் கமலை போட்டியாளர்கள் ஒரு பொம்மையாகவே பார்ப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவை பார்த்து நலல் வேளை இன்று கமல் மாயாவை ஒரு வழி பண்ணப் போகிறார் என்பது போலத்தான் தோன்றும். ஆனால் அதுதான் இல்லை என்று சில செய்திகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: அப்பா இருந்தபோது இருந்த ரஜினி கமல் வேற!.. இப்ப வேற!.. மனம் திறக்கும் பாலச்சந்தர் மகள்…

மேலும் டிக்கெட் டு ஃபினாலேயில் யார் அந்த டிக்கெட்டை பெறப் போகிறார்களோ அவர்களுக்கு கமல் நேரிடையாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அந்த டிக்கெட்டை கொடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு பட்டப் பெயர் வீட்டில் வைத்துக் கொண்டு வருகிறார்கள்.

அதை குறிப்பிட்டு பேசிய கமல் வெளியில் உங்களுக்கு ரசிகர்கள் என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? சொல்லட்டுமா? என்றும் கூறி போட்டியாளர்களை வாயடைக்க வைத்திருக்கிறார். இன்றும் ஒரு எவிக்‌ஷன் இருக்கிறது என இன்று எபிசோடு ஆரம்பித்ததுமே கமல் போட்டியாளர்களிடம் கூறிவிட்டாராம்.

அதனால் இன்று பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்க இருப்பதால் போட்டியாளர்களும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.

இதையும் படிங்க: ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கே ஆட்டம் காட்டிய நடிகர்… கமல் படத்தில் நடந்த சம்பவம்!…