Connect with us
avm

Cinema History

ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கே ஆட்டம் காட்டிய நடிகர்… கமல் படத்தில் நடந்த சம்பவம்!…

திரையுலகை பொறுத்தவரை நடிகர்களின் சம்பளம் என்பது அவருக்குள்ள டிமாண்டை பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதாவது, அவர் நடிக்கும் திரைப்படங்கள் எந்த அளவுக்கு ஓடுகிறது. அவரின் நடிப்புக்கு ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை பொறுத்தே அவருக்கான சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

இது நடிகர்களுக்கும் தெரியும். அதனால்தான் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை ஏத்திவிடுவார்கள். சில நடிகர்கள் நடிக்கும் படங்கள் பெரிதாக லாபம் இருக்காது. ஆனாலும், சம்பளத்தை குறைக்க மாட்டார்கள். ஒரு படம் ஓடிவிட்டால் அவ்வளவுதான். சம்பளத்தை சில கோடிகள் ஏத்தி விடுவார்கள்.

இதையும் படிங்க: முதலிரவுக்கு போட வேண்டிய பாடலா இது? வாலி எழுதியதை மாற்றச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்

மாநாடு படத்தில் நடிக்கும்போது 8 கோடி மட்டுமே சம்பளம் வாங்கிய சிம்பு அப்படத்தின் வெற்றிக்கு பின் ரூ.30 கோடி வரை சம்பளத்தை ஏற்றிவிட்டார். அதேபோல்தான் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் 40 கோடி வரை சம்பளம் கேட்டார். மாவீரன் ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயன் 50 கோடியை தாண்டி சம்பளம் கேட்டதாக கூட செய்திகள் வெளியானது.

sv subbaiah

ஏவிஎம் தயாரிப்பில் பீம்சிங் இயக்கி 1960ம் வருடம் வெளிவந்த திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த படத்தில்தான் சிறுவனாக அறிமுகமானார். ஜெமினி கணேசன், சாவித்ரி முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் உருவான போது ஒரு வேடத்தில் நடிகர் எஸ்.வி.சுப்பையா நடித்தால் சரியாக இருக்கும் என நினைத்த ஏவிஎம் தரப்பு அவரை அணுகியது.

இதையும் படிங்க: காத்திருந்த ஏவி மெய்யப்ப செட்டியார்!.. ஜாலியாக சரக்கடித்து கொண்டிருந்த வாலி!.. ஆனாலும் எழுதினாரு சூப்பர் பாட்டு!…

ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டார். எனவே, வேறு நடிகரை நடிக்க வைத்தனர். ஆனால், அவரின் நடிப்பில் மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தி இல்லை. எனவே, மீண்டும் எஸ்.வி.சுப்பையாவிடம் செல்ல ஒரு நடிகரிடம் சென்றுவிட்டு அது சரியாக இல்லை என்றுதானே என்னிடம் மீண்டும் வந்தீர்கள். அதனால், முன்பு நான் கேட்டதை விட அதிக சம்பளம் வேண்டும் என எஸ்.வி.சுப்பையா கேட்டார்.

வேறு வழியின்றி அந்த சம்பளத்திலேயே அவரை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தனர். இப்படி பல சிக்கல்களை தாண்டித்தான் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெய்யப்ப செட்டியாரை ஏமாற்றிய ஏவிஎம் குமரன்! ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடந்த ஆள்மாறாட்டம்

google news
Continue Reading

More in Cinema History

To Top