கனகா கேட்ட ஒரே ஒரு உதவி! அத பண்ணிட்டா ஹேப்பி ஆயிடுவா – துணிந்து இறங்கும் குட்டிபத்மினி

Published on: December 18, 2023
kanaga
---Advertisement---

Actress Kanaga: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக இருந்த ராதிகா, ராதா, அம்பிகா இவர்கள் இருந்த நேரத்திலேயே அறிமுகமான குறுகிய காலத்திற்குள் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் நடிகை கனகா.

குறும்புத்தனமான நடிப்பு, அழகான தோற்றம் என அனைவரையும் மிக எளிதாக கவர்ந்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை கனகாவிற்கு பெற்றுக் கொடுத்தது. ஏகப்பட்ட படங்களில் நடித்த கனகா கூலி திரைப்படத்தில்தான் கடைசியாக ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: முதல் திருமணத்தை விட இரண்டாம் திருமணத்தில் தான் அது அதிகம்..! சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்..!

அதன் பிறகு கனகா என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. திருமணம், குழந்தை என அந்த வாழ்க்கையிலேயே நுழையவில்லை கனகா. இந்த நிலையில் கனகாவுடன் இருக்கும் புகைப்படத்தை குட்டிப்பத்மினி சமூக வலைதளங்களில் வைரலாக்கினார்.

அது காட்டுத்தீ போல பரவியது. இந்த நிலையில் குட்டிபத்மினி கனகாவை சந்தித்தது பற்றி ஒரு பேட்டியில் கூறினார். கனகாவின் வீடு 5, 6 பூட்டுக்களைக் கொண்டுதான் பூட்டி இருக்குமாம். பார்க்கவே அருந்ததீ பட அரண்மனை வீடு இருக்கும் என்றுகுட்டி பத்மினி கூறினார்.

ஒரு வேளை சுவர் மீது ஏறி குதித்து போக வேண்டும் என நினைத்தாலும் உள்ளே நாய்கள் இருக்குமா என்ற அச்சமும் இருந்ததாம். அப்படியே போனாலும் மெயின் கதவும் பூட்டித்தான் இருக்குமாம். ஆனால் மாலை நேரத்தில் மட்டும் வீட்டிற்குள் ஒரு லைட் எரிந்து கொண்டு இருக்குமாம். ஆனால் பார்ப்பதற்கு பாழடைந்த பங்களா மாதிரிதான் இருக்குமாம்.

இதையும் படிங்க: ஜோதிடம், ஜாதகம் மீது இவ்ளோ நம்பிக்கை கொண்டவரா எம்ஜிஆர்? தேடி வந்த அரிய வாய்ப்பை தள்ளி வைத்த காரணம்

இது பல காலமாக தொடர எப்படியாவது கனகாவை பார்க்க வேண்டும் என அன்று வெளியில் 2 மணி நேரம் காரிலேயே உட்கார்ந்திருந்தாராம் குட்டி பத்மினி. அப்போது ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாராம் கனகா. உடனே குட்டி பத்மினி கனகாவை அழைத்து பேச அருகில் இருக்கும் காஃபி ஷாப்பிற்கு போனார்களாம்.

தன் அப்பாவும் நானும் இப்போது சமாதானம் ஆகிவிட்டோம் என்றும் இப்போது ஆளுக்கு ஒரு வீடு என பிரித்துக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கூறினாராம் கனகா. இப்பொழுது இருக்கும் கனகா வீடு 13 கோடி வரை இருக்குமாம். அதை விற்று ஒரு புதிய ஃப்ளாட் வாங்கலாமே என்று குட்டிபத்மினி கூறினாராம்.

இதையும் படிங்க: கோபிக்கு முன்னாடி சண்டைக்கு நிப்பாங்க பாத்தா..! இப்படியா சப்போர்ட் பண்ணுறீங்க..!

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் ஆண்டி. என்னுடைய ஒரு இடம் அரசு ஆக்கிரமித்திருக்கிறது. அதை மட்டும் வாங்கிக் கொடுங்கள் என்று கனகா கேட்டாராம். உடனே குட்டிபத்மினி இப்போது இருக்கும் அரசு நமக்காக எதுவேண்டுமானாலும் செய்யும். நான் அதை மீட்டுத்தருகிறேன் என்று சொல்லிவிட்டு கனகாவை மறுபடியும் அவர் வீட்டிலேயே விட்டு விட்டு வந்து விட்டாராம் குட்டிபத்மினி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.