Cinema News
கேப்டனால மட்டும் விஜய் வரல! நானும்தான் நடிச்சுக் கொடுத்தேன் – சூசகமாக சொன்ன மூத்த நடிகர்
Actor Vijayakanth: எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக மக்கள் நலனில் அக்கறை கொண்ட நடிகராக இருந்தவர் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த். மதுரையை விட்டு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவர் ஆரம்பகாலத்திலேயே பல பேருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவராகத்தான் இருந்திருக்கிறார்.
டாப் ஹீரோவாக ஜொலிப்பதற்கு முன்பாகவே அவரை தேடி போகும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர் வயிறு நிரப்ப வைத்துதான் அனுப்புவாராம். இதை பற்றி ராதாரவி கூட சமீபத்தில் கூறினார். சாப்பாடு விஷயத்தில் எம்ஜிஆருக்கு அடுத்தப்படியாக இருப்பது விஜயகாந்த் என்றும்,
இதையும் படிங்க: கனகா கேட்ட ஒரே ஒரு உதவி! அத பண்ணிட்டா ஹேப்பி ஆயிடுவா – துணிந்து இறங்கும் குட்டிபத்மினி
எம்ஜிஆர் புரட்சித்தலைவர், விஜயகாந்த் புரட்சிக்கலைஞர் என்று அந்த விஷயத்தில் கூட இருவருக்கும் ஒத்துப் போகிறது என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் இன்று ஒரு டாப் ஹீரோவாக வசூல் மன்னனாக இருக்கும் விஜயை அனைவருக்கும் தெரியவைத்தது விஜயகாந்தினால் தான் என்றும் கூறிவருகிறார்கள்.
அது உண்மைதான். ஆனால் விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தேன். வெறும் 25000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்தேன் என்று கூறினார். மேலும் தொகுப்பாளர் ராதாரவியிடம் ‘லியோ விழாவில் கேப்டனை மறக்காமல் புரட்சிக்கலைஞர் என்று விஜயகாந்தைத்தான் விஜய் முதலிடத்தில் வைத்தார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என கேட்டார்.
இதையும் படிங்க: முதல் திருமணத்தை விட இரண்டாம் திருமணத்தில் தான் அது அதிகம்..! சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்..!
அதற்கு ராதாரவி விஜய் இந்த சினிமாவில் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜயகாந்துக்கு மட்டும்தான். அந்த மேடையில் அவர் சொன்னார் என்றால் அது பெருமைக்குரியது. கண்டிப்பாக சொல்ல வேண்டும். அதற்கான நாளைய தீர்ப்பு படத்தில் கூட நான் நடித்தேன். என் பேரை சொல்லவில்லை என்றெல்லாம் நான் கேட்க முடியாது என்று சூசகமாக கூறினார் ராதாரவி.