Cinema History
கருணாநிதி கதாசிரியராக மாற காரணமே அந்த நடிகர்தானாம்!. இது தெரியாம போச்சே..
கலைஞர் கருணாநிதி அரசியல்வாதி ஆவதற்கு முன் கதாசிரியராகவும், வசனகர்த்தாகவும் திரையுலகில் தனது கேரியரை துவங்கியவர். ஏனெனில், சில பத்திரிக்கைகளில் எழுதி கொண்டிருந்தார். அதன்பின் நண்பர்கள் மூலம் சினிமாவுக்கு வந்தார். எம்.ஜி.ஆர் ஹீரோவாக அறிமுகமான ராஜகுமாரி படத்தில்தான் கதாசிரியராக அறிமுகமானார்.
அதன்பின் எம்.ஜி.ஆர் நடித்த அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி, மந்திரகுமாரி ஆகிய படங்களுக்கு கருணாநிதிதான் வசனம் எழுதினார். சிவாஜி ஹீரோவாக அறிமுகமான பராசக்தி படத்திலும் கதை, வசனம் எழுதியது கலைஞர் கருணாநிதிதான். இந்த படத்தில் அவர் எழுதியிருந்த வசனங்கள் தீப்பொறி போல தமிழ்நாடெங்கும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கருணாநிதிக்கு எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ பட்டம் கொடுத்தது இப்படித்தான்!.. சுவாரஸ்ய தகவல்..
இந்த படம் மூலம்தான் வசனகர்த்தாவாக கருணாநிதி ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அதன்பின் பல திரைப்படங்களும் கலைஞர் கதை, வசனம் எழுதியிருக்கிறார். சினிமாவில் கதை, வசனம் எழுதுபவராக இருந்தாலும் கலைஞர் முதலில் எழுதியது நாடகங்கள்தான். அவருக்கு நாடகத்தை எழுத வேண்டும் என தூண்டியவர் ஒரு நடிகர் என்றால் நம்ப முடிகிறதா?..
அது வேறுயாருமல்ல.. நடிகவேள் எம்.ஆர்.ராதாதான். எம்.ஆர்.ராதா மறுமலர்ச்சி என்கிற பெயரில் புரட்சி நாடகங்களை எழுதி, நடத்தி வந்தார். இத்தனைக்கும் அப்போது அவர் திராவிட கழகத்திலும் இல்லை. ஒருமுறை அவரின் நாடகம் ஒன்றை பார்க்க கருணாநிதி போனார்.
இதையும் படிங்க: உனக்கு எதுக்கு இந்த வேலை!.. வேற எதாவது ட்ரை பண்ணு!.. கருணாநிதி மகனை எச்சரித்த எம்.ஜி.ஆர்!..
எம்.ஆர்.ராதாவின் நாடகத்தை பார்த்தபோதுதான் நாமும் ஏன் நாடகம் எழுதக்கூடாது என கருணாநிதிக்கு தோன்றியுள்ளது. அப்படி அவர் திராவிட கொள்கைகளை அடிப்படையாக வைத்து எழுதிய முதல் நாடகம்தான் ‘சாந்தா அல்லது பழனியப்பன்’. இந்த நாடகத்தை விழுப்புரத்தில் ஒரு அரங்கில் நடத்தினார் கலைஞர்.
இதில் ஆச்சர்யம் என்னவெனில் இந்த நாடகத்தை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒருவரிடம் விற்றார். நீங்கள் இதில் நடிக்க வேண்டும் என அவர் சொல்ல கருணாநிதியும் அதற்கு சம்மதித்தார். விழுப்புரத்தில் ஒரு அறை வாடகைக்கு எடுத்து மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து சரியான சாப்பாடு கூட இல்லாமல் ஒத்திகை பார்த்து அந்த நாடகத்திலும் கருணாநிதி நடித்தார்.
ஆனால், திராவிடம் என்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை அப்போதிருந்த மக்களுக்கு புரியவில்லை. எனவே, இந்த நாடகத்திற்கு கூட்டம் அவ்வளவாக இல்லை. அதன்பின் அந்த நாடகம் தோல்வியிலும் முடிந்தது. அதன்பின் சினிமாவில் வசனகர்த்தாவாக களம் இறங்கி பிரபலமடைந்தார்.
இதையும் படிங்க: கருணாநிதி கதையை காபி அடித்த கண்ணதாசன்… ஆனா கடைசியில் கலைஞரைதான் பாதிச்சது!..