அது ‘பாஸ்’ இல்லைங்க! தளபதி 68 பற்றி அர்ச்சனா கல்பாத்தியே சொன்ன சூப்பர் தகவல்!

Published on: December 20, 2023
vijay
---Advertisement---

Thalapathy 68: விஜய் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது தளபதி 68. வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சு சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர்களும் நடிக்கிறார்கள்.

கூடவே லைலாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அடக்கொடுமையே!.. எல்லாத்துக்கும் ரெடியான ஹீரோயின்!.. 2 வருஷத்துல லேடி சூப்பர்ஸ்டார் ஆகிடணுமாம்!

ஒரு கேரக்டர் அப்பா , இன்னொரு கேரக்டர் மகன் என்று சொல்லப்படுகிறது. இதனால் இள வயது விஜய் கதாபாத்திரத்திற்காக ஒரு புதிய தொழில் நுட்பத்தை படக்குழு பயன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அதற்காகத்தான் விஜய் , வெங்கட் பிரபு மற்றும் கல்பாத்தி அர்ச்சனா போன்றோர் முதல் வேளையாக அமெரிக்கா சென்றார்கள்.

இப்போது படத்தின் மற்ற படப்பிடிப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தளபதி 68 படத்தை பற்றிய தலைப்பு இணையத்தில் வைரலாகி வருகின்றது. படத்திற்கு பாஸ் என்ற தலைப்பை வைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கருணாநிதி கதாசிரியராக மாற காரணமே அந்த நடிகர்தானாம்!. இது தெரியாம போச்சே..

இந்த செய்தி வெளியானதில் இருந்து விஜயை நெட்டிசன்கள் கிழிக்க ஆரம்பித்து விட்டனர். தமிழ் நாட்டின் தளபதியாக வேண்டும். ஆனால் படத்திற்கு மட்டும் ஆங்கிலத் தலைப்பா? என்று கேட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் இதைப் பற்றி சம்பந்தப்பட்ட நபரே தன் இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அர்ச்சனா கல்பாத்தில் தன் X தள பக்கத்தில் ‘எல்லா அப்டேட்களையும் பார்த்து வருகிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. ஆனால் கொஞ்சம் காத்திருங்கள். வெங்கட் பிரபு இப்பொழுதுதான் உங்களுக்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்டிப்பாக அது பாஸ் இல்ல. ஒரு புதிய தலைப்போடு விரைவில் சந்திப்போம்’ என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இதையும் படிங்க: விஜய் வாய்க்கு வந்ததை பேசுனாரு.. அது எதுமே நடக்காது.. இதையாவது செஞ்சா போதும்.. கே. ராஜன் அதிரடி!

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.