16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…

Published on: December 21, 2023
bobby
---Advertisement---

Lyca Production: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது லைகா நிறுவனம்தான். அவர்களுக்கு இணையாக தற்போது கோலிவுட்டில் ஒரு போட்டி உருவாகி கொண்டு இருக்கிறது. அதுகுறித்த தகவலை பத்திரிக்கையாளர் பரமேஷ்வரன் தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட்டில் அஜித்தை வைத்து விடாமுயற்சி, ரஜினிகாந்தை வைத்து வேட்டையன், கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்களை தயாரித்து வருகிறது லைகா நிறுவனம். கிட்டத்தட்ட இந்த மூன்று படங்களின் செலவு மட்டுமே 1500 கோடிக்கும் மேல் என்று தான் கூறப்படுகிறது. லால் சலாம் படத்தை தயாரித்துள்ளதும் இந்த நிறுவனம்தான்.

இதையும் படிங்க: ஏலே இதுக்கெல்லாம் விவகாரத்தா..? ஐஸ்வர்யா வீட்டுல கூட இந்த பிரச்னை தானாம்… சுத்தம்..!

இத்தனை பெரிய பட்ஜெட்டில் இன்று வரை தமிழ்சினிமாவில் லைகாவுக்கு சமமாக யாருமே இல்லை. ஆனால் தற்போது ஒரு போட்டி உருவாகி இருக்கிறது. அமெரிக்காவில் சைபர் க்ரைம் காவல்துறைக்கே சாப்ட்வேர் சப்ளை செய்யும் நிறுவனத்தினை நடத்தி வரும் பாபி பாலசந்திரன் தற்போது கோலிவுட்டுக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறார். 

bobby

இவரின் சொத்து மதிப்பே 16 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் நாசரேம் எனும் பகுதியை சேர்ந்தவர். தன்னுடைய இளமை காலத்திலேயே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். முதல் படமாக டிமாண்ட்டி காலனி 2ஐ தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருக்கிறார். முதல் பாகத்தினை தயாரித்தது கருணாநிதியின் மூன்றாவது மகன் மு.க.தமிழரசு.

இதையும் படிங்க: அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே! நம்ம முதல்வரா இவர்? புதிய பட லுக்கில் ஜீவா

அப்படி செல்வாக்கான குடும்பத்தின் ஆதரவுடன் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் ஐடியாவில் தான் அருள்நிதியின் படத்தினை முதலில் தயாரித்து இருக்காராம். இந்த படத்தின் ரிலீஸ் முடிந்து மேலும் பல முன்னணி ஹீரோக்களை தயாரிக்கும் முடிவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவர் தொடர்ந்து சினிமாவில் இருந்தால் லைகாவுக்கு போட்டி தான் எனவும் கூறி இருக்கிறார்.

demante

சமீபத்தில் கூட பாபி பாலசந்திரன் ரஜினியை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். 2025ல் இவரின் தயாரிப்பில் கூட ரஜினி நடிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இத்தனை நாள் பிரம்மாண்ட நிறுவனமாக இயங்கி வந்த லைகாவுக்கு இந்த சேதி கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கும். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கே இது 2வது கல்யாணம்!.. பிரபு வீட்ல நடந்த பஞ்சாயத்து.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்..