Connect with us
je

Cinema News

அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே! நம்ம முதல்வரா இது? புதிய பட லுக்கில் ஜீவா

Actor Jeeva: தமிழ் சினிமாவில் ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். பிரபல சினிமா பட தயாரிப்பாளரான ஆர்.பி,சௌத்ரியின் மகனாக ஜீவா தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவருடைய சகோதரரான ரமேஷும் ஒரு நடிகர் ஆவார். ஆனால் ஜீவா அளவுக்கு அந்தளவு பிரபலமாகவில்லை ரமேஷ். ஜீவாவுக்கு ஒரு தரமான கெரியரை அமைத்துக் கொடுத்த படமாக ‘ராம்’ என்ற திரைப்படம் அமைந்தது. வித்தியாசமான கெட்டப்பில் அனைவரையும் மிரட்டினார்.

இதையும் படிங்க: ஆதிக் ரவிச்சந்திரனுக்கே இது 2வது கல்யாணம்!.. பிரபு வீட்ல நடந்த பஞ்சாயத்து.. பிரபலம் பகிர்ந்த சீக்ரெட்..

இடையிடையே சில தோல்விகளை தந்தாலும் அவருடைய நடிப்பை வெளிப்படுத்திய படமாக கற்றது தமிழ், ரௌத்திரம், என்றென்றும் புன்னகை, முகமூடி,  நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களை குறிப்பிடலாம். கோ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த படமாக அமைந்தது.

இருந்தாலும் ஜீவாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின் வெப் சீரிஸ் பக்கம் சென்றார். ஒரு ரியாலிட்டி ஷோவையும் நடத்தினார். இருந்தாலும் வாய்ப்புகள் வராமல்தான் இருந்தன. இந்த நிலையில் தெலுங்கில் ஒரு புதிய படத்தின் லுக் இன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஏலே இதுக்கெல்லாம் விவகாரத்தா..? ஐஸ்வர்யா வீட்டுல கூட இந்த பிரச்னை தானாம்… சுத்தம்..!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய பயோபிக் சம்பந்தப்பட்ட ஒரு படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.  ‘யாத்ரா 2’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடிகர் ஜீவா நடிக்கிறார். ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ஆர்.ரெட்டியாக மம்மூட்டி நடிக்கிறார்.

jeeva

jeeva

போஸ்டரில் ஜீவாவை பார்க்கும் போது அப்படியே அச்சு அசலாக ஜெகன் மோகன் ரெட்டி மாதிரியே தான் இருக்கிறார்.

இதையும் படிங்க: நான்தான்னு யார் சொன்னா?.. என்னை வாழ வச்சதே ரஜினிதான்!.. மனம் திறந்து பேசிய பாலச்சந்தர்…

google news
Continue Reading

More in Cinema News

To Top