latest news
மாஸ்டர் பீஸா?.. மரண மொக்கையா?.. பிரபாஸின் சலார் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!
கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள சலார் படம் இன்று வெளியானது.
கேஜிஎஃப் திரைப்படத்தில் கோலார் தங்க சுரங்கத்தை பற்றிய ஒரு ஆழமான அழுத்தமான கதை இருந்தது. ஆனால், சலார் படத்தில் அது ரொம்பவே மிஸ்ஸிங். யாருக்குமே தெரியாமல் வரை படத்திலேயே இல்லாத ஒரு ராஜ்ஜியத்தை ஜகபதி பாபு ஆண்டு வருகிறார். அவரது மகன் பிருத்விராஜ் அதற்கு பிறகு ஆளப்போகிறார். ஆனால், அது மற்ற சிற்றரசர்களுக்கு பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டுக்குள்ள போனா முதல் வேலையா ஓங்கி ஒரு அறைதான்! வனிதா சொன்ன அந்த போட்டியாளர்
வெளிநாட்டில் இருந்து அம்மாவின் அஸ்தியை கரைக்க அப்பாவின் பேச்சை மீறி இந்தியா வரும் ஸ்ருதிஹாசனை தூக்க கான்சார் ஆட்கள் நினைக்கின்றனர். அவர்களிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்ற பிரபாஸின் அம்மா ஈஸ்வரி ராவ் மனது வைத்தால் தான் முடியும் என அவரது பள்ளியில் டீச்சராக சேர்த்து விடுகின்றனர்.
எந்த சண்டைக்கும் போகக் கூடாது என அம்மா சத்தியம் வாங்கிய நிலையில், ஒட்டுமொத்த கோப ஃபேக்டரியையும் அடக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார் பிரபாஸ். கான்சார் முத்திரைக் குத்தி அங்கே அவரை கடத்திச் செல்லும் போது ஈஸ்வரி ராவ் ஸ்ருதிஹாசனை காப்பாற்ற தான் வாங்கிய சத்தியத்தை வாபஸ் வாங்குகிறார். அம்மா அனுமதி கொடுத்ததும் எரிமலையாக வெடிக்கும் ஒன் மேன் ஆர்மி எதிரிகளை என்ன செய்தார். அவருக்கு பிருத்விராஜுக்கும் இடையே இருந்த நட்பு எப்படி? இருவரும் எதிரிகளாக மாறியது ஏன்? என பல கேள்விகளுடன் படத்தின் கதை ஓடுகிறது.
இதையும் படிங்க: அந்த பாடல் வரிகளை நான் பாட முடியாது.. அடம் பிடித்த இளையராஜா.. கடைசியில் அந்த பாட்டு ஹிட்டாம்..!
பிரபாஸ் மட்டுமே ஒட்டுமத்த படத்தில் மாஸ் காட்டுகிறார். சண்டைக் காட்சிகள் எல்லாம் சரவெடியாக இருந்தாலும், ஒரே ரணகளமாகவும் ரத்தக் களறியாகவும் இருப்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் ரசிக்க முடியவில்லை. மேலும், கான்சார் கோட்டைக்குள் பிரபாஸ் பண்ணும் வேட்டைகள் எல்லாம் அய்யோ சாமி முடியல ரகமாகவே உள்ளது. படம் முழுக்கவே லாஜிக் ஓட்டைகள் அதிகம் உள்ளன. ஏற்கனவே பார்த்த படித்த பல புராண கதைகளில் இருந்து காட்சிகளை எடுத்து புதுசா வச்சிருப்பது போலத்தான் தெரியுது.
சலார் – சற்று பொறுமை தேவை!
ரேட்டிங்: 3/5.