Connect with us

Cinema News

அட்லீ பண்ணதுல பாதி கூட ராஜ்குமார் ஹிரானி பண்ணலையே!.. செம கடுப்பில் ஷாருக்கான்.. டங்கி வசூல் எவ்வளவு?

பிரபாஸின் சலார் கூட மோதாமல் முதல் நாள் தனியா ரிலீஸ் ஆன ஷாருக்கான் டங்கி படத்தின் வசூல் அட்லீ இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான ஜவான் படம் பாலிவுட்டில் பண்ண வசூலை கூட உலகளவில் பண்ணவில்லை என்பது ஷாருக்கானையே செம ஷாக் ஆக்கி உள்ளது.

இந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் உள்ளிட்ட படங்கள் 1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளன. டங்கி திரைப்படமும் 1000 கோடி வசூல் ஈட்டும் என ஷாருக்கானும் அவரது ரசிகர்களும் கண்ட கனவை எல்லாம் டங்கி திரைப்படம் முதல் நாளிலேயே குழி தோண்டி புதைத்து விட்டது.

இதையும் படிங்க:  தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா!.. தீபிகா படுகோன், ஹ்ரித்திக் ரோஷன் கெமிஸ்ட்ரியை பார்த்தீங்களா!

இன்றிலிருந்து மேலும், புதைக்க பிரபாஸின் சலார் வெளியாகி விட்டது. முதல் நாள் இந்தியளவில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் நடித்த டங்கி திரைப்படம் 30 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், தற்போது உலகளவில் எத்தனை கோடி வசூல் என்பதை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் டங்கி திரைப்படம் 58 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இந்தி பெல்ட்டில் மட்டும் முதல் நாள் 65 கோடி வசூலையும் உலகம் முழுவதும் 127 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஸ்டர் பீஸா?.. மரண மொக்கையா?.. பிரபாஸின் சலார் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி ஆக்‌ஷன் படத்தை கொடுக்காமல் வழக்கம் போல தனது ஸ்டைலில் காமெடி டிராமா படத்தை கொடுத்த நிலையில், பெருவாரியான ரசிகர்கள் தியேட்டர் மெட்டீரியல் இல்லை பொறுமையாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து விட்டார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top