சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தின் கதை, திரைக்கதை மட்டுமல்ல. இயக்குனர் – தயாரிப்பாளர் இருவருக்குமான உறவு, இயக்குனர் – நடிகருக்கான உறவு என எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே அந்த திரைப்படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் துவங்கி சரியாக முடிந்து ரிலீஸ் ஆகும். அதன்பின் அது ரசிகர்களுக்கு பிடித்ததா? வெற்றி பெற்றதா? என்பது வேறு கதை.
ஆனால், அதில் எது சரியாக இல்லை என்றாலும் படம் டேக்ஆப் ஆகாது. அல்லது சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்து அப்படியே நின்றுவிடும். இது பல திரைப்படங்களுக்கு நடந்துள்ளது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பிரச்சனை ஏற்பட்டால் இயக்குனர் மாறிவிடுவார். அல்லது வேறு தயாரிப்பாளரை தேடி இயக்குனர் போய்விடுவார்.
இதையும் படிங்க: குருவிடமே சீன் போட்ட ரஜினிகாந்த்.. ஆனா இந்த பிரபலத்துக்கு மட்டும் இதை செய்தாராம்..!
சில படங்களில் ஹீரோவே மாறிவிடுவார். வசந்த் இயக்கத்தில் விஜய் – அஜித் இணைந்து நடித்த திரைப்படம்தான் நேருக்கு நேர். சில நாட்கள் அஜித் நடித்தார். ஆனால், அவருக்கும், இயக்குனருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு அந்த படத்திலிருந்து அஜித் விலகிவிட அவருக்கு பதில் சூர்யாவை வசந்த் அப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
சில சமயம் ஒரு கதையில் படம் துவங்கி பின்னர் வேறு கதையாக மாறிவிடும். இது ரஜினி படங்களுக்கே நடந்துள்ளது. ரஜினியை வைத்து ‘காலம் மாறிப்போச்சி’ என ஒரு படம் துவங்கப்பட்டது. 13 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ரஜினி தினமும் வந்து நடித்தார். ஆனால், அவருக்கு கதை மீது நம்பிக்கை வரவில்லை. இயக்குனரை அழைத்து இந்த கதை வேண்டாம். கன்னடத்தில் தேவா என்கிற படம் வந்துள்ளது. இதை பாருங்கள். இதை ரீமேக் செய்வோம் என சொல்லிவிட்டு சிடியை கையில் கொடுத்துவிட்டு போய்விட்டார்.
இதையும் படிங்க: ரஜினி அதுக்கு வொர்த்!. ஆனா கிடைக்கவே இல்ல.. கடைசி வரை வருத்தப்பட்ட பாலச்சந்தர்…
அதன்பின் அதற்கேற்ப மாற்றி திரைக்கதை எழுதி உருவான திரைப்படம்தான் தர்மதுரை, 1991ம் வருடம் வெளிவந்த இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். தம்பிகளே உலகம் என நினைத்த ஒரு அண்ணனை அவரின் தம்பிகள் ஏமாற்றிவிடுவார்கள். சிறையிலிருந்து வெளியே வந்த ரஜினி அவர்களை என்ன செய்தார் என்பதுதான் இப்படத்தின் கதை.
ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்திருப்பார். இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் தம்பிகளாக நிழல்கள் ரவி மற்றும் சரண்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதையும் படிங்க: 16 ஆயிரம் கோடி சொத்து.. ரஜினியுடன் மீட்டிங்!.. லைக்காவுக்கு போட்டியா களமிறங்கும் தயாரிப்பாளர்…
