Cinema News
இந்த வருஷம் வெளியான 254 படத்துல இத்தனை படம் தான் தேறுச்சு!.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!..
2023ம் ஆண்டு கடந்த ஆண்டை விட தமிழ் சினிமாவுக்கு அதிக வருமானத்தையும் வியாபாரத்தையும் ஈட்டி தந்துள்ளது. 3500 கோடிக்கும் அதிகமான வியாபாரம் நடைபெற்றுள்ளதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருஷம் ஒட்டுமொத்தமாக 254 படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. ஒரு வாரத்துக்கு கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5 படங்கள் வரை வெளியாகி உள்ளன என்று தான் கணக்கு பண்ண முடிகிறது.
இதையும் படிங்க: சலார் படம் சொதப்ப குறிப்பா இந்த 4 பேர் தான் காரணம்!.. அதுல ஹைலைட்டே அந்த நடிகர் தான்!..
ஆனால், இதில் வெற்றி சதவீதம் என பார்த்தால் வெறும் 9 சதவீதம் மட்டுமே என அதிர்ச்சியை கிளப்புகிறார். 254 படங்களில் வெறும் 24 படங்கள் மட்டுமே லாபம் அடைந்திருப்பதாகவும் மீதம் உள்ள 220க்கும் மேற்பட்ட படங்கள் நஷ்டத்தை தான் சந்தித்துள்ளது மிகப்பெரிய வேதனைக்குரிய விஷயம் என்றும் இதில், 15க்கும் மேற்பட்ட நல்ல கதையம்சம் கொண்ட விமர்சன ரீதியாக பாராட்டுக்களை அள்ளிய படங்களையும் மக்கள் புறக்கணித்தது தான் பெரும் சோகம் என அவர் பேசி உள்ளார்.
100 கோடிக்கு மேல் சுமார் 9 படங்கள் வசூல் ஈட்டியுள்ளன. அதில், மாவீரன், மார்க் ஆண்டனி, வாத்தி உள்ளிட்ட படங்கள் இடம்பெறுகின்றன. மேலும், 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படமாக துணிவு, 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய படங்களாக வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: நல்லா கிழங்கு மாதிரி கும்முன்னு இருக்க!. சிருஷ்டி டாங்கேவை எக்குதப்பா ரசிக்கும் ஃபேன்ஸ்..
அதிகபட்சமாக 600 கோடி வசூலை ஜெயிலர் மற்றும் லியோ படங்கள் இந்த ஆண்டு கடந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க நயன்தாராவின் அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் ஒரு கோடி கூட வசூல் செய்யாமல் சொதப்பியது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என அவர் பேசியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் வியாபாரம் 4000 கோடியை தாண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதில் 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய படங்கள் என்றால் டாடா, குட் நைட், ஜோ, பார்க்கிங் மற்றும் அயோத்தி தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.