Connect with us

Cinema News

சலார் படம் சொதப்ப குறிப்பா இந்த 4 பேர் தான் காரணம்!.. அதுல ஹைலைட்டே அந்த நடிகர் தான்!..

பாகுபலி படத்திற்கு பிறகு மீண்டும் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் இணைந்தால் மட்டுமே வெற்றி கிடைக்குமா? என்கிற சந்தேகம் அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவருக்கே இந்நேரம் வந்திருக்கும். கேஜிஎஃப் 2 பாகங்களை கொடுத்து கன்னட இண்டஸ்ட்ரியிலேயே ஹிட் கொடுத்த பிரசாந்த் நீல் டோலிவுட்டுக்கு தேவையான மசாலாக்களை கொடுக்காமல் அதே ஃபார்மட்டில் படம் எடுத்து மீண்டும் பிரபாஸுக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கிறார்.

வசூல் ரீதியாக சலார் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறை வரை பெரிய கலெக்‌ஷன் அள்ளும் என்றே தெரிகிறது. ஆனால், மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறுமா என்பதில் தான் பெரிய சிக்கல் உள்ளது. இந்த படம் சொதப்ப காரணமே நான்கு நடிகர்களின் காஸ்டிங் தான் என ரசிகர்கள் புதிதாக ஒரு உருட்டை உருட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: குளூர்ல நீ வேற டெம்பரேச்சர் ஏத்தி கொல்லுறியே!.. மொத்த அழகையும் காட்டும் மாளவிகா!…

அதில், முதலாவது ஸ்ருதிஹாசன் தானாம். ஸ்ருதிஹாசன் அறிமுகமான 7 ஆம் அறிவு, விஜய்யுடன் நடித்த புலி என பல பெரிய படங்கள் சொதப்பி வந்த நிலையில், சலார் படத்திற்கு அவரை ஹீரோயினாக போட்டதே பெரிய சொதப்பலான விஷயம் தான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முகத்தில் ஹீரோயினுக்கான எந்தவொரு கலையும் இல்லாமல் ரசிக்கும் படி ஒரு காட்சியில் கூட வந்து செல்லாமல் கடுப்பை கிளப்புகிறார்.

அடுத்து நம்ம ஜகபதி பாபு. அவர் வில்லனாக நடித்தாலே படம் ஃபிளாப் தான் என ஏகப்பட்ட ட்ரோல்கள் பறந்து வரும் நிலையில், இதில் பிருத்விராஜின் அப்பாவாக நடித்து இம்சை செய்கிறார். திடீரென அவர் வெளியூருக்கு சென்றதுமே மகனையே போட்டுத் தள்ள பிளான் போடும் அளவுக்குத் தான் அந்த ராஜ்ஜியம் இருக்கிறதா? என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர்களுக்கு ஆப்பு வைத்த ஓடிடி நிறுவனங்கள்!.. இனிமே 100 கோடிலாம் சம்பளமா கேட்க முடியாது!..

மூன்றாவதாக பாபி சிம்ஹாவை சொல்கின்றனர். பாபி சிம்ஹாவுக்கு அத்தனை பெரிய கதாபாத்திரம் கொடுத்து பிரசாந்த் நீல் சொதப்பி விட்டார். கடைசி கிளைமேக்ஸில் அவரை சவுர்யாங்காவாக காட்டும் காட்சிகள் எல்லாம் காமெடியின் உச்சம்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் படத்தின் நாயகன் பிரபாஸ் தான் என பகீர் கிளப்புகின்றனர். தோல்வியே கொடுக்காத பிரசாந்த் நீலுக்கும் தோல்வியை கொடுத்து விட்டார். எந்தவொரு சீனிலும் எமோஷனல் கனெக்ட்டே இல்லாமல் அடியாள் மாதிரியே நடித்திருக்கிறார். ஆனால், அவரது ஆக்‌ஷன் காட்சிகள் தான் படத்தை வசூல் ரீதியாக காப்பாற்றும் என்பது தனிக்கதை.

google news
Continue Reading

More in Cinema News

To Top