Connect with us
Pondamani VV

Cinema History

போண்டா மணி சாவுக்கு கூட போகாத வடிவேலு… நடந்தது இதுதான்!.. ஷாக்கா இருக்கே!..

இலங்கையைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி. இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல்களைத் தெரிவித்தனர்.  போண்டா மணி சிறுநீரக செயல் இழப்பால் உடல் நலம் குன்றி காலமானார். அவரது கடைசி காலத்தில் பொழிச்சலூரில் தான் இருந்தாராம். பல்லாவரம் அருகில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தாராம்.

கோவில்பட்டியைச் சேர்ந்த போண்டாமணியின் ரசிகர் ஒருவர் தான் பொழிச்சலூரில் போண்டாமணி தங்கி இருக்க வீடு கொடுத்தாராம். அந்த வீட்டில் எவ்வளவு நாள்கள் வேணாலும் இருங்க. வாடகை வேணாம்னும் சொல்லிட்டாராம்.

இதையும் படிங்க: இறுதிவரை நம்பிக்கையோடு இருந்த போண்டாமணி! நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை..

போண்டாமணி, சிங்கமுத்து, முத்துக்காளை, பெங்கல்ராவ் , பாவா லட்சுமணன், அல்வா வாசு என பல நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து வடிவேலு காமெடியாக நடித்ததால் தான் அவர் நகைச்சுவை ஜாம்பவனாகவே வளர்ந்து இருக்கிறார். அந்த வகையில் அவரது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நபர் போண்டா மணி.

bonda

ஒரு படத்தில் உனக்கு வந்தா ரத்தம்… எனக்கு வந்தா தக்காளி சட்னியாடான்னு வடிவேலு காமெடி வரும். அந்த காமெடி இந்த அளவு ரீச்சாகக் காரணமே போண்டா மணி தானாம். அதே மாதிரி பட்டி தொட்டி எங்கும் பரவிய வடிவேலு காமெடி உண்டு.

அடிச்சும் கேட்பாங்க. அப்பவும் சொல்லிடாதன்னு ஒரு காமெடி உண்டு. அதற்கும் போண்டாமணி தான் காரணமாம். வடிவேலுவிடம் போண்டாமணி உதவி கேட்டு கதறி கேட்ட சம்பவமும் உண்டு. அப்போது வடிவேலு அவருக்கு உதவாமலா போயிடுவேன்னு சொன்னாராம் .

இதையும் படிங்க:  கடைசி வரை கண்டுக்காத வடிவேலு!.. வீட்டிலேயே திடீரென சுருண்டு விழுந்து இறந்த போண்டா மணி

ஆனா இந்த அளவுக்கு வடிவேலுவுடன் கெமிஸ்ட்ரியில் ஒத்துப் போய் நடித்த போண்டாமணியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட வடிவேலு வரவில்லை என்பது வருந்த வேண்டிய விஷயம். துணை நடிகர்கள் தன்னைவிட சிறப்பாக பர்பார்மன்ஸ் செய்தால் மானிட்டரில் பார்க்கும் வடிவேலு அவரை அடித்து கடைசி வரிசையில் நிற்க வைத்து விடுவாராம்.  என்னை மீறி ஒருவன் வந்துவிடக்கூடாது என்ற பயமே இதுற்குக் காரணமாம். அதேபோல், போண்டா மணி மருத்துவமனையில் இருந்தபோதும் அவருக்கு வடிவேலு எந்த உதவியும் செய்யவில்லை.

என்னதான் இருந்தாலும் போண்டாமணியுடன் இவ்வளவு அசத்தலான காமெடிகளை் செய்து விட்டு வடிவெலு அவரது இறப்பில் கூட பங்கேற்காமல் இருந்தது தவறு என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜா போட்ட மெட்டையே பாடலாக்கிய கவிஞர் வாலி.. என்ன பாடல் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top