Cinema News
என் பக்கமே நீ வராத!. போண்டா மணியை எச்சரித்த விவேக்… எதுக்குனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…
Vivek: தமிழ் சினிமாவில் தனது காமெடிகளின் மூலம் மக்களை கட்டி போட்டவர் நடிகர் விவேக். முற்போக்கு சிந்தனைகளை தனது காமெடியான நடிப்பின் மூலம் மிகச்சிறப்பாக வெளிக்காட்டியவர். இவரின் காமெடிகளுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த காமெடி நடிகரான விவேக் கொரோனா காலத்தில் மரணமடைந்தார். காமெடிகள் மட்டுமல்லாமல் பல வித குணச்சித்திர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார். மனதில் உறுதி வேண்டும் எனும் திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையும் வாசிங்க:நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..
இவரின் காமெடிகளின் மூலம் இவர் சின்ன கலைவாணர் எனும் பட்டத்தை பெற்றார். இவர் சினிமாவை தாண்டி நிஜத்தில் சிறந்த மனிதரும் கூட. மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் விதத்தில் இருந்த இவரின் காமெடிகள் பலரின் கவனத்தை ஈர்த்தன.
கவுண்டமணி செந்தில் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்தது மட்டுமல்லாமல் வடிவேலுவுடனும் இணைந்து பல காமெடிகளில் நடித்துள்ளார். வடிவேலுவின் பல காமெடிகள் வெற்றியடைவதற்கு அவருடன் உடன் நடித்த போண்டா மணி, பாவா லெட்சுமணன் போன்ற நடிகர்கள்தான் காரணம். இதில் போண்டா மணி மிகவும் குறிப்பிடத்தக்கவர்.
இதையும் வாசிங்க:போண்டா மணி சாவுக்கு கூட போகாத வடிவேலு… நடந்தது இதுதான்!.. ஷாக்கா இருக்கே!..
போண்டா மணி விவேக்குடன் இணைந்து பல நாடகங்களில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு வடிவேலுவுடன் காமெடிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த காமெடியும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது போண்டா மணி விவேக்கிடம் வந்துள்ளார். அப்போது விவேக் இனி நீ இந்த பக்கமே வரக்கூடாது. எனக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினாராம்.
உடனே அதை கேட்ட போண்டா மணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. உடனே விவேக்கிடம் ‘எதற்காக இப்படி பேசுகிறீர்கள்?’ என கேட்டுள்ளார். அதற்கு விவேக் வடிவேலுவுடனே இருந்து மென்மேலும் உயர்ந்துவிடுமாறும் மேலும் நீ இங்கு வந்தது அவர்களுக்கு தெரிந்தால் உனது வாழ்க்கை பாதிக்கப்படலாம் என அவருக்கு அறிவுரை கூறினாராம். இப்படி ஒரு நல்ல எண்ணம் கொண்டிருந்தவர் நடிகர் விவேக்.
இதையும் வாசிங்க:இறுதிவரை நம்பிக்கையோடு இருந்த போண்டாமணி! நிறைவேறாமலேயே போன கடைசி ஆசை..