லியோ படத்தின் ரிசல்ட்!. லோகேஷுக்கு ரஜினி வைத்த செக்.. மொத்தமும் போச்சா!…

Published on: December 27, 2023
lokesh
---Advertisement---

Thalaivar 171: சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகரோ, இல்லை இயக்குனரோ.. அவரின் முந்தையை படத்தின் வெற்றி, தோல்விதான் அவரின் இமேஜாக இருக்கும். அண்ணாத்த படத்திற்கு ரஜினி வாங்கி சம்பளம் ரூ.100 கோடிக்கும் மேல். ஆனால், படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. எனவே, அப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் கால்ஷுட் கொடுத்தார் ரஜினி.

அப்படி உருவான படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம் ரூ.80 கோடி மட்டுமே. ரஜினிக்கே இந்த நிலை எனில் மற்ற நடிகர்களை சொல்ல தேவையில்லை. இதே இயக்குனர்களுக்கும். கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களின் வெற்றி லோகேஷ் கனகராஜை பெரிய இயக்குனராக மாற்றியது. அவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உருவானது.

இதையும் படிங்க: ட்ரோல் ஆகும் கோட்!.. கடுப்பான விஜய்!.. தளபதி 68 படத்தின் தலைப்பு அது இல்லையாம்!..

அவர் இயக்கும் படங்களை லோக்கி யூனிவர்ஸ் என்றனர். அதோடு, எல்.சி.யூ என்றனர். அதாவது லோகேஷின் முந்தை படங்களில் வரும் சில கதாபாத்திரங்கள் அவரின் அடுத்த படத்திலும் வருவதுதான் எல்.சி.யூ. அப்படி விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

எந்த பக்கம் பார்த்தாலும் லியோ.. லியோ.. என அப்படத்தை பற்றிய பேச்சாகவே இருந்தது. படம் வெளியாகி ஜெயிலர் பட வசூலை தாண்டிவிடும். ஆயிரம் கோடி வசூலை தொடும் என சிலர் சொன்னார்கள். ஆனால், அப்படி வெளியான படம் ரசிகர்களை கவரவில்லை. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

இதையும் படிங்க: இவன் சினிமாவில் நடிக்க கூடாது!. கறாரா சொன்ன சிவாஜி!.. பிரபு ஹீரோவான கதை இதுதான்!..

இதற்கு முன்பே ரஜினியை சந்தித்து பேசினார் லோகேஷ். அவர் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடித்திருந்தது. ஆனால், லியோ படத்தின் ரிசல்ட்டுக்கு பின் கதையில் பல மாற்றங்களை ரஜினி செய்ய சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், தலைவர் 171 படம் பற்றி கேட்டதற்கு ‘இனிமேல்தான் கதையை எழுதப்போகிறேன்’ என லோகேஷ் சொன்னார்.

மேலும், ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தயாரிப்பாளர் கொடுக்கும் அழுத்தத்தில் இனிமேல் படமே எடுக்க மாட்டேன் எனவும் லோகேஷ் சொல்லியிருக்கிறார். ரஜினி இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் லோகேஷின் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் வழியில் சிவகார்த்திகேயன்!.. இமான் மேட்டரை பத்தி வாயே திறக்காமல் கம்முன்னு இருந்துட்டாரே!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.