Connect with us
sivaji prabu

Cinema History

இவன் சினிமாவில் நடிக்க கூடாது!. கறாரா சொன்ன சிவாஜி!.. பிரபு ஹீரோவான கதை இதுதான்!..

Actor prabu: நடிகர் சிவாஜி ஒரு திறமையான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். நாடகங்களில் பல வருடங்கள் நடித்து பெற்ற அனுபவம் அவருக்கு சினிமாவில் கை கொடுத்தாலும் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்களிடம் புகழ் பெற்றவர் இவர்.

இவரின் மகன் பிரபுவும் சினிமாவில் நடிக்க துவங்கி பல வேடங்களில் நடித்து பிரபலமனவர்தான். 80களில் நடிக்க துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய பிரபு 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார்., அதன்பின் கடந்த பல வருடங்களாகவே ஹீரோ மற்றும் ஹீரோயினியின் அப்பாவாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கமலிடமிருந்து வந்த போன் கால்!.. ரஜினி செய்த வேலை!.. ஆடிப்போன சக நடிகர்…

பிரபு வெளிநாட்டில் படித்தவர். அவரை எப்படியாவது ஒரு போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் சிவாஜியின் ஆசையாக இருந்துள்ளது. அதற்காக அவருக்கு பல பயிற்சிகளுக்கும் சிவாஜி ஏற்பாடு செய்தார். ஆனால், பிரபுவை சினிமா விடவில்லை. 1981ம் வருடம் ஹிந்தியில் ஹிட் அடித்த முக்காதர் கா சிக்கந்தர் படம் தமிழில் அமரகாவியம் என்கிற தலைப்பில் படமானது.

அந்த ஹிந்தி படத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அம்ஜத்கான் நடித்த அந்த வேடத்தில் தமிழில் பிரபுவை நடிக்க வைக்க இயக்குனர் நினைத்தார். ஆனால், சிவாஜி ஒத்துக்கொள்ளவில்லை. அதேபோல், இயக்குனர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சிவாஜி அனுமதிக்கவில்லை. அதேபோல், ஹிந்தியில் ஹிட் அடித்த காளிச்சரன் படம் தமிழில் சங்கிலி என்கிற பெயரில் உருவானது.

இதையும் படிங்க: இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி – மாப்பிள்ளை யார் தெரியுமா?

இப்படத்தில் ஒரு முக்கிய வேடம். பிரபு நடித்தால் சரியாக இருக்கும் என நினைத்த இயக்குனர் சிவி ராஜேந்திரன் சிவாஜியிடம் கேட்க அவரோ ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, சிவாஜியின் தம்பி சண்முகத்திடம் பேசி அவர் மூலம் சிவாஜியை சம்மதிக்க வைத்தார். இப்படித்தான் 1982ம் வருடம் வெளியான சங்கிலி படத்தில் பிரபு அறிமுகமானார்.

முதல் படத்தில் அப்பா சிவாஜியுடன் சண்டை போடும் கதாபாத்திரம். பிரபு அந்த வேடத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். சிவாஜியின் மகன் நடித்திருக்கிறார் என்றே ஆலுடன் படம் பார்க்க ரசிகர்கள் வந்தார்கள். அதன்பின் நலந்தானா, சின்னஞ்சிறுசுகள், அதிசயப்பிறவிகள், லாட்டரி டிக்கெட், கோழி கோவுது ஆகிய படங்கள் மூலம் ஹீரோவாக மாறினார் பிரபு. கோழி கூவுது படத்தின் வெற்றி பிரபுவை மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவாக மாற்றியது.

இதையும் படிங்க: தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top