
Cinema History
தேவர் மகனில் சிவாஜிக்கு பதில் அவர்.. ரேவதிக்கு பதில் இன்னொரு நடிகை!.. கடைசியில் கமல் செய்த மாற்றம்!..
Devar Mahan: கமல் எழுதி தயாரித்த தேவர் மகன் படத்தினை பரதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் பெயர் பெற்ற இரண்டு கதாபாத்திரம். பெரிய தேவர், கமலின் மனைவி பஞ்ச வர்ணம். அதற்கு முதலில் கமல் தேர்வு செய்த நடிகர்கள் யார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் ரிலீஸாகி இருக்கிறது.
தேவர் மகன் படத்தின் ஸ்கிரிப்டை கமல் வெறும் ஏழு நாட்களில் சாப்ட்வேர் மூலம் முடித்தாராம். இப்படத்திற்கு அமெரிக்கன் காட் பாதர் மற்றும் கன்னடாவை சேர்ந்த காடு படம் இன்ஸ்பிரேஷனாக இருந்ததாக கமல் நிறைய இடங்களில் பதிவு செய்து இருக்கிறார். பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார்.
இதையும் படிங்க: இது கன்பார்ம்!..தளபதி68 பட டைட்டில் இதுதான்.. கமலுக்கு செம டஃபா இருக்குமே!…
இளையராஜா இசையமைக்க இப்படம் 1992ம் ஆண்டு தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகியது. இப்படத்தில் பெரிய தேவராக சிவாஜி கணேசன், பஞ்சவர்ணமாக ரேவதி, பானுமதியாக கௌதமி, மாயன் தேவராக நாசர், இசக்கியாக வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். பலரின் சினிமா கேரியருக்கு இப்படம் மிகப்பெரிய அச்சாரமாக அமைந்தது.
இப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. பெரிய வரவேற்பை பெற்றது. 65வது அகாடமி ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட வெளிமாநில படமாக அங்கீகாரம் பெற்றது. சிறந்த தமிழ் திரைப்படம், ரேவதிக்கு சிறந்த துணை நடிகை மற்றும் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு ஜூரி விருது உட்பட ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.
ஆனால் இதில் சிவாஜி மட்டும் தன்னுடைய தேசிய விருதை நிராகரித்தார். பின்னால், நான்தான் அதை நிராகரிக்க சொன்னேன். அவருக்கு சிறந்த நடிகர் விருது தானே கொடுத்திருக்க வேண்டும். சிறப்பு ஜூரி விருது இல்லை என்றும் கமல் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: முருகதாஸ் படத்தில் விஜய் பட வில்லன்!. அவர்கிட்ட அடி தாங்குவாரா நம்மா எஸ்.கே?!..
இருந்தும், அவர் சரியாகி வரும் வரை காத்திருந்து படத்தினை இயக்கினாராம். அதுமட்டுமல்லாமல், ரேவதி வேடத்தில் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை மீனா தானாம். அவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் முடிந்ததாம். ஆனால் அவர் கமலுக்கு ரொம்ப சின்ன பிள்ளையாக தெரியவே அவருக்கு பதில் ரேவதி மாற்றப்பட்டாராம்.