அஜித் படத்துக்காக டிரஸ் கூட எடுக்காம வந்த எஸ்.ஜே.சூர்யா! 12 நாள் டிரஸ் இல்லாம என்ன செய்தார் தெரியுமா?

Published on: December 28, 2023
surya
---Advertisement---

Actor S.J.Surya: இன்று தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனராக இருந்து இந்த கோலிவுட்டே மறக்கமுடியாத வகையில் இரு தரமான படங்களை கொடுத்தவர்.

அதன் பின் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் ஆரம்பத்தில் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு வரவேற்பை பெறவில்லை. அதனாலேயே வில்லன் அவதாரம் எடுத்தார்.

இதையும் படிங்க: சோ-விடம் சவால் விட்டு பெரிய நடிகராக மாறியவர்!. யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப் படுவீங்க!

மெர்சல், மாநாடு, டான், போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து அனைவரையும் மிரட்டி வருகிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் எஸ்.ஜே.சூர்யா எந்தளவு சினிமா மீது வெறியாக இருந்தார் என்பதை இயக்குனர் மணி பாரதி கூறியிருக்கிறார்.

மணி பாரதி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாரிமுத்து இவர்கள் ஒன்றாகத்தான் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள். அந்தவகையில் ஆசை படத்தில் இவர்கள் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்திரிக்கிறார்கள்.

இதையும் படிங்க: போண்டா மணியின் மொத்தக் கடனையும் தீர்த்த விஜயகாந்த்! இந்த நிலைமையிலும் கேப்டன் செஞ்ச உதவி

ஆசை படத்தின் ஒரு சில காட்சிகள் டெல்லியிலும் நடைபெற்றது. அதனால் டெல்லிக்கு போக வேண்டும் என்ற ஆசையில் வசந்திடம் எஸ்.ஜே.சூர்யா கேட்டிருக்கிறார். ஆனால் பட்ஜெட் கருதி இயக்குனர் வசந்த வேண்டாம் என சொல்லியிருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு நாய்க்குட்டியும் நடித்திருக்கும்.

அந்த நாய்க்குட்டியை ஏற்பாடு செய்து கொடுத்தது எஸ்.ஜே.சூர்யாதானாம். அதனால் டெல்லிக்கு நாய்க்குட்டியை கொண்டு சென்றால் அதை பாதுகாக்க ஒருவர் வேண்டுமே என்று எஸ்.ஜே.சூர்யாவை அழைத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனா இப்படி? பிரபுதேவாவால் கடுப்பான ரோஜா பட நடிகை

இதுதான் சரியான சான்ஸ் என நினைத்து டிரஸ் கூட எடுக்காமல் டெல்லிக்கு சென்று விட்டாராம் எஸ்,ஜே.சூர்யா. உடுத்தியிருந்த ஆடை மட்டும்தான் அவருடன் இருந்தது. 12 நாள்கள் சூட்டிங் என்பதால் இரவு நேரத்தில் வந்து அந்த டிரஸை கழட்டி துவைத்து காயப் போட்டுவிடுவாராம். மறு நாள் மீண்டும் அந்த ஆடையை  உடுத்திக் கொண்டு படப்பிடிப்பிற்கு செல்வாராம் எஸ்.ஜே.சூர்யா.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.