Connect with us
prabhu

Cinema News

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சனா இப்படி? பிரபுதேவாவால் கடுப்பான ரோஜா பட நடிகை

Actor Prabhudeva: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படுபவர் நடிகர் பிரபுதேவா. ஆரம்பத்தில் குரூப் டான்சராக இருந்து அதன் பின் டான்ஸ் மாஸ்டராக வளர்ந்து பின் நடிப்பிலும் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தார் பிரபுதேவா.

90களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்தவர் பிரபுதேவா. தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களான சிம்ரன், மீனா, மதுபாலா, ரோஜா ஆகியோருடன் ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ள நடிகராக மாறினார் பிரபுதேவா.

இதையும் படிங்க: சேதுபதி ஐபிஎஸ் படத்தில் ஒரு காட்சிக்காக 18 நாட்கள் ஷூட்டிங்.. கேப்டன் விஜயகாந்தே சொன்ன ரகசியம்…!

தற்போது இயக்குனராகி பல படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். பாலிவுட்டிலும் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில் நடிகை மதுபாலா பிரபுதேவா குறித்து ஒரு தகவலை கூறினார். பிரபுதேவாவும் மதுபாலாவும் இணைந்து மிஸ்டர் ரோமியோ படத்தில் ஜோடியாக நடித்தனர்.

அந்தப் படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக தண்ணீரை காதலிக்கும் என்ற பாடல் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலாகவே இருந்து வருகிறது. அந்தப் பாடலுக்கு நடனம் அமைக்கும் போது மதுபாலாவுக்கு ஈகோ வந்ததாம்.

இதையும் படிங்க : சிவாஜிக்கு வாக்கு கொடுத்த ஜெய்சங்கர்!.. கடைசி வரை செய்ய முடியலையே!…

அது பிரபுதேவாவால் தான் நடந்தது என கூறினார். அதாவது அவருடைய போர்ஷனை அவர் நடனம் ஆடி பிராக்டிஸ் செய்து விட்டாராம். அதன் பிறகு மதுபாலாவுக்கு அவருடயை உதவியாளரை வைத்து சொல்லிக் கொடுக்க சொல்லிவிட்டு போய்விட்டாராம்.

இது மதுபாலாவுக்கு hurt ஆகிவிட்டதாம். அதனால் எனக்கு அந்த நேரத்தில் ஈகோ உண்டானது என ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : ‘ஆசை’ படத்தில் எங்களால் அவமானப்பட்ட அஜித்! செய்த தவறை எண்ணி வருத்தப்படும் இயக்குனர்

google news
Continue Reading

More in Cinema News

To Top