அப்படின்னா எல்லாமே 'தில்லாலங்கடி' வேலையா?.. திட்டமிட்டு அதிக நாட்கள் ஓட்டிய படங்களின் லிஸ்ட்!...

தமிழ்த்திரை உலகில் சில படங்கள் நல்லா தான் ஓடியிருக்கும். ஆனாலும் படம் இவ்ளோ நாள் ஓடிச்சான்னு ஆச்சரியமா இருக்கும். சில படங்கள் பார்க்கவே சகிக்காது. அதையும் நல்லா வச்சி ஓட்டிருப்பாங்க. அந்த லிஸ்டைப் பார்க்கலாமா...

சச்சின் படம் 2005ல் தமிழ்ப்புத்தாண்டு அன்று வெளியானது. இது பாசிடிவ்வான விமர்சனங்களைத் தான் தந்தது. கமர்ஷியல் படம் தான். ஆனால் இந்தப் படம் 100 நாள்கள் தான் ஓடியது. ஆனால் 200 நாள்களைக் கடந்து ஓடிருக்கு. சென்னை பேபி ஆல்பர்ட், கமலா தியேட்டர்களில் பகல் காட்சி மட்டும். இந்த 2 தியேட்டர்களிலும் தயாரிப்பாளர்கள் தான் ஓட விட்டுருப்பாங்க.

சச்சின், சந்திரமுகி என இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸானது. ரஜினி, பிரபு நடித்த படம். பிளாக் பஸ்டர் ஹிட். சந்திரமுகி . உண்மையிலேயே 250 நாள்கள் வரை ஓடியுள்ளது. ஆனால் இந்தப் படத்தயாரிப்பாளர் தனது சென்னை சாந்தி தியேட்டரில் அதுவும் பகல் காட்சியில் மட்டும் 810 நாள்கள் வரை வச்சி ஓட்டிருக்காங்க. கில்லி வசூலை முறியடித்த படம் இது.

Chandramuki

Chandramuki

சரத்குமார் நடித்து, தயாரித்து, இயக்கிய படம் தலைமகன். இது 2006ல் தீபாவளிக்கு வெளியானது. இது 3 வாரம் தான் ஓடியது. அதே போல சென்னை சாந்தி தியேட்டரில் பகல் காட்சி மட்டும் 100 நாள் வரை வச்சி ஓட்டினாங்க. நயன்தாரா, வடிவேல் நடித்த படம்.

அழகிய தமிழ் மகன் படத்தை பரதன் இயக்கினார். ஏ,ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். விஜய் நடித்த படம். இது ஓடவே இல்லை. ஆனால் சாய்சாந்தி தியேட்டரில் 850 நாள் வரை ஓடியதாம். இது எடிட் பண்ணி வெளியான போஸ்டர். உண்மையிலேயே 60 நாள் வரை ஓடியிருக்கும். 100 நாள் எல்லாம் வச்சி ஓட்டினது.

2008ல் தரணி இயக்கத்தில் குருவி படம் வெளியானது. இது ஆவரேஜ் ஹிட். இந்தப் படம் 75 நாள் கூட ஓடியிருக்கும். ஆனால் தேவிகலா தியேட்டர்ல 150 நாள் வரை வச்சி ஓட்டியிருக்காங்க. கே.பாலசந்தர், வெங்கட்பிரபு எல்லாரும் வந்து இந்த விழாவுல கலந்துக்கிட்டாங்க. தயாரிச்சது உதயநிதி ஸ்டாலின்.

இதையும் படிங்க... மணிரத்னம் படம்.. ஜோடி ஸ்ரீதேவி.. வாய்ப்பை தவறவிட்ட ராமராஜன்… மனுஷன் இப்படியா இருப்பாரு!..

2008ல் வெளியான படம் ஏகன். டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கினார். தல அஜீத் நடித்த படம். இது ஒரு ஆவரேஜ் ஹிட். அதிகப்படியா 50 நாள் ஓடியிருக்கும். இது சென்னை ஸ்டார், கிருஷ்ணவேணி தியேட்டர்ல 125 நாள் பகல் காட்சியில வச்சி ஓட்டினாங்களாம்.

2011ல் லத்திகா படம் வந்தது. பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்துள்ளார். இவர் தான் தயாரிப்பாளர். பரதன் இயக்கினார். இந்தப் படம் 1 வாரம் கூட ஓடியிருக்காது. இது நஷ்டம் தான். இந்தப் படத்தை மகாலெட்சுமி தியேட்டர்ல 225 நாள் வரை வச்சி ஓட்டியிருக்காங்களாம். அத்தனை நாள் படத்தை ஓட்டிய செலவை அந்த தியேட்டர் அதிபருக்கு பவர் ஸ்டாரெ கொடுத்தார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி 2012ல் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படம். 175 நாள் வரை வச்சி ஓட்டியிருக்காங்க. நேர்மையா 100 நாள் வரை ஓடியிருக்கும். சந்தானம் காமெடி இந்தப் படத்தில் அல்டிமேட்டா இருக்கும்.

Thuppakki

Thuppakki

கபாலி படம் 2016ல் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கம். ரஜினியின் அதிரடி படம். இது வசூல் சாதனை படம். மதுரை மணி இம்பாலில் 250 நாள்கள் வரை வச்சி ஓட்டினாங்களாம். ஆனால் உண்மையில் 100 நாள்கள் ஓடியது.கேங்ஸ்டர் மூவி.

துப்பாக்கி 2012ல் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படம். இது 100 நாள்கள் வரை ஓடியிருக்கு. 175 நாள் வரையும் வச்சி ஓட்டியிருக்காங்க. பேபி ஆல்பர்ட்ல 300 நாள் வரை பகல் காட்சியில வச்சி ஓட்டினாங்களாம்.

 

Related Articles

Next Story