மணிரத்னம் படம்.. ஜோடி ஸ்ரீதேவி.. வாய்ப்பை தவறவிட்ட ராமராஜன்... மனுஷன் இப்படியா இருப்பாரு!..
நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் கதாநாயகனாகி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் நாயகன் ராமராஜன். 80 காலகட்டங்களில் கமல், ரஜினிக்கு டஃப் கொடுத்தன இவரது படங்கள். பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. பாடல்களை எல்லோரும் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இளையராஜா தான் என் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். அந்த வகையில் திடீரென காணாமல் போனார்.
இதையும் படிங்க... கரகாட்டக்காரன்2 ஆ? அடுத்த படத்தில் கண்டிப்பாக அது இருக்கும்… சீக்ரெட் சொன்ன ராமராஜன்…
அதன்பிறகு நடித்தால் ஹீரோ தான் என வந்த பல வாய்ப்புகளையும் தட்டிக் கழித்தார். தற்போது சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கிறார். இதனால் தினமும் சமூகவலைதளங்களில் அவரது பேட்டி தான் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தனது படங்கள் குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நான் நடிக்கறது எனக்கும் பிடிக்கணும். ரசிகர்களுக்கும் பிடிக்கணும். ஜனங்களுக்கும் பிடிக்கணும். நான் போய் பாக்சரா நடிக்க முடியுமா? ஜனங்க ஏத்துக்குவாங்களா? ஒரு பால் கறக்குறவன், தலையில கரகத்தை வச்சி ஆடுறவன் எப்படி பாக்சரானான்னு கேள்வி வரும்.
சாமானியனுக்கு முன்னாடி வரை என் படத்தால தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்தது இல்லை. எத்தனை கதை கேட்டாலும் நமக்குப் பிடிக்கறதுக்குத் தான் உடன்படுவோம். நிறைய பேர் வந்து சொன்னாங்க. இன்டர்வெல்ல வர்றது, கடைசில வர்றதுங்கற கேமியோ ரோல் நம்ம பாடிலாங்குவேஜ்க்கு ஒத்து வராது.
எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், என்ன பெத்த ராசா, ராசாவே உன்னை நம்பி என்ற இந்த லிஸ்டில் சாமானியனும் வரும். படத்துல அருமையான கதை, அருமையான இன்ட்ரோ, அருமையான கிளைமாக்ஸ் இருக்கு. இது மக்களைத் திருப்திப்படுத்தும்.
சாமானியன் கிளைமாக்ஸைப் பார்த்துட்டு யாருமே ஃபீல் பண்ணாம இருக்க முடியாது. மனித வாழ்க்கையில இந்தக் கருவைத் தாண்டி மனுஷன் பொறந்து வளர்ந்து வாழ்ந்து போக முடியாது. மணிரத்னம் சார் டைரக்ஷன்ல எனக்கு ஜோடியா ஸ்ரீதேவியைப் போட்டு நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா என்னால போக முடியல. நிறைய சின்ன சின்ன படங்கள்ல அட்வான்ஸ் வாங்கிக்கிட்டு நான் நடிச்சிக்கிட்டு இருந்தேன். அவங்களால மாற்ற முடியல. ஆனா அது நல்ல சாய்ஸ். அந்தக் காலத்துல தியேட்டர்ல ஓடாத படங்கள் எல்லாம் இன்னைக்கு டிவில ஓடிக்கிட்டு இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.