
Cinema News
நீ பொட்டு வச்ச தங்க குடம்.. ஊருக்கு நீ மகுடம்.. விஜயகாந்த் செய்த சரித்திர சாதனை!
Published on
கருப்பு என்ற நிறம் காரணமாகவே பலராலும் நிராகரிக்கப்பட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அதையே பிளஸ் பாயிண்டாக்கி சினிமா உலகில் சாதித்துக் காட்டினார். கிராமத்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பலத்த ஆதரவு கிடைத்தது.
சமூகத்தில் எங்கு அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தைரியமாகத் தட்டி கேட்கும் வேடத்தில் நடித்து அசத்தினார். அது சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும் கூட. அவர் சிறுவயதிலேயே எம்ஜிஆரின் படங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு சினிமாவிற்கு வந்தவர்.
கருப்பால் நிராகரிக்கப்படுகிறோமே என்று வருந்தாமல் தொடர் முயற்சியால் சினிமாவில் சாதித்தே ஆக வேண்டும் என்று போராடினார். அதன் பலனாக அவருக்கு கருப்பு எம்ஜிஆர் என்ற பட்டமே மக்கள் மத்தியில் கிடைத்தது. 1984ல் 18 படங்களில் நடித்து ஒரு அபார சாதனையை நிகழ்த்தினார் விஜயகாந்த்.
இந்த சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது. நல்ல நாள், மாமன் மச்சான், மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், வெற்றி, வேங்கையின் மைந்தன், நூறாவது நாள், குழந்தை யேசு, வெள்ளை புறா ஒன்று, சபாஷ், சத்தியம் நீயே, இது எங்க பூமி, ஜனவரி 1, குடும்பம், வைதேகி காத்திருந்தாள், வீட்டுக்கு ஒரு கண்ணகி, நாளை உனது நாள் என்ற படங்கள் தான் அவை.
VK3
விஜயராஜ் என்ற பெயருடன் இனிக்கும் இளமை படத்தில் அறிமுகமானார் விஜயகாந்த். இந்தப் படத்தின் இயக்குனர் எம்.ஏ.காஜா. அவருக்கு விஜயராஜ் என்ற பெயரில் இஷ்டமில்லை. அதனால் அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர் ரஜினிகாந்த். அவரோட பின்பாதி பெயரை விஜயராஜ்ஜில் உள்ள ராஜ்ஜை எடுத்து விட்டு விஜயகாந்த் என்று மாற்றினார். அன்று முதல் விஜயராஜ் விஜயகாந்த் ஆனார்.
பிற்காலத்தில் ரஜினி, கமலுக்கே டஃப் கொடுக்கும் அளவு பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். 1981ல் வெளியான சட்டம் ஒரு இருட்டறை படம் இவரது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகால வெற்றிக்கு பலமான அஸ்திவாரம் போட்டது. படத்தில் அவர் கம்பீரமாக பேசும் வசனங்கள் அத்தனையும் மக்கள் மத்தியில் அவருக்கு பலத்த ஆதரவைப் பெற்றுத்தந்தன.
1991ல் கேப்டன் பிரபாகரன், 1992ல் சின்ன கவுண்டர் ஆகிய படங்கள் பட்டி தொட்டி எங்கும் அவரது புகழைக் கொண்டு போய் சேர்த்தன. வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், வானத்தைப் போல, ரமணா, தவசி, தாயகம் என பல வெற்றிப்படங்களைத் தந்த விஜயகாந்த் 150 படங்களுக்கும் மேல் நடித்து அசத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் புதுப்புது இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவர் தான். இதுவரை 54 புதிய இயக்குனர்களுக்குத் தன் படங்களில் வாய்ப்புக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
STR49 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒரு புதிய படத்தின் வேலைகள் 2 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த...
TVK Vijay: கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருப்பவர் விஜய். ஜனநாயகன் படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் 225 கோடி...
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....