Cinema News
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை!. விஜயகாந்தின் உடல் அடக்கம்!. கண்ணீர் மல்க விடை கொடுத்த மக்கள்…
Vijayakanth: கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலை 6 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் மரணமடைந்தார். அதன்பின் அவரின் உடல் சாலிகிராமத்தில் இருக்கும் அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு சில நடிகர்கள் அஞ்சலில் செலுத்தினர். அதன்பின் விஜயகாந்தின் உடல் கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கும் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரின் உடல் தீவுத்திடல் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்காக தன்னை மாற்றிக்கொண்ட முதல்வர் கருணாநிதி… எந்த நடிகருக்கும் இந்த தைரியம் இல்லப்பா.!
அங்கு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும், பொதுமக்கள் பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் 2 மணிக்கு மேல் அவரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மாலை 5.45 மணியளவில் தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் மக்களின் அவரின் உடலுக்கு பூக்களை துவி மரியாதை செலுத்தினார்கள்.
அதன்பின் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை, அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் என பலரும் மலர் வளையம் வைத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்துக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட்டது.
இதையும் படிங்க: அதிசயம்… இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும் கேப்டன்… எப்படின்னு தெரியுமா?
அதன்பின் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அவருக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்தனர். பலரும் அவரை தொட்டு தொட்டு கண்ணீர் விட்டு கும்பிட்டனர். அதன்பின் அவரின் குடும்பத்தினர் இறுதிசடங்கு செய்தனர்.
அதன்பின் அவரின் உடல் குழியில் வைக்கப்பட்டு மூடப்பட்டது. அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள், விஜயகாந்த் ரசிகர்கள் பொதுமக்கள் எல்லோரும் கணத்த மனதுடன் விடைபெற்று சென்றனர்.