Cinema News
விஜய் ஒன்னும் கேக்கவும் இல்ல.. கேப்டனை பார்க்க ஆசைப்பட வும் இல்ல! பிரேமலதா சொன்ன அந்த விஷயம்
Actor Vijay: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருகிறது. தளபதி68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா போன்றவர்கள் நடிக்கின்றனர்.
அவர்களுடன் சேர்ந்து பிரபுதேவா, பிரசாந்த் , லைலா போன்றவர்களும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு விஜய் கொஞ்சம் பிரேக் எடுத்து அரசியலில் ஈடுபட போவதாக கோடம்பாக்கத்தில் பேச்சு வந்தது. ஆனால் அதற்கான வேலையில்தான் விஜய் இப்போது இறங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: கவர்ச்சியே காட்டாமல் ரசிகர்களைத் தன் நடிப்பால் கட்டிப் போட்ட நாயகிகள்… இப்படியும் இருக்காங்களா?
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவு அனைவரையும் உலுக்கியது. விஜயகாந்தால் இந்த சினிமாவில் வளர்ந்தவர்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விஜய் மற்றும் சூர்யா. இருவரின் சினிமா கெரியரில் விஜயகாந்தின் பங்கு மிக முக்கியமானது.
ஆனால் அந்த நன்றிக்கடனை விஜய் ஒரு போதும் காட்டவில்லை என்பதுதான் அனைவரின் வருத்தமாக இருந்தது. விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட ஒரு முறையாவது விஜய் சந்தித்தாரா இல்லையா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: அஜித்தோடு ஒரே மோட்டிவ் இதுதான்! சினிமாவை விட சுற்றுப்பயணத்தில் ஆர்வம் இருக்க காரணம் இதுதானா?
இதைப் பற்றி பல விமர்சனங்கள் விஜய் மீது எழுந்தது. ஆனால் நேற்று வெளியான ஒரு செய்தியில் ஒரு பத்திரிக்கையாளர் ‘விஜய்க்கு நெருக்கமானவரிடம் விசாரித்த போது பல முறை விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்டு விஜய் காத்திருந்ததாகவும் ஆனால் பிரேமலதா விஜயை பார்க்க அனுமதிக்கவில்லை ’ என்று சொன்னதாக அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.
ஆனால் கேப்டனுக்கு விசுவாசியாக இருந்தவரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் இது பற்றி ஒரு தகவலை கூறினார். இவர்தான் அடிக்கடி விஜயை பற்றி மீடியாக்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். அதனால் பிரேமலதா மீசை ராஜேந்திரனை அழைத்து ‘விஜய் வரும் போது வருவார். மிகவும் வற்புறுத்தி அவரை அழைக்க வேண்டாம்.’ என்பது போல் சொன்னாராம். அதிலிருந்தே மீசை ராஜேந்திரன் விஜயை பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டாராம்.
இதையும் படிங்க: கலைஞர் வரிகளை பாட மறுத்த கே.பி.சுந்தராம்பாள்!… அவருக்காக தனது கொள்கையையே மாற்றிய கருணாநிதி…