திமிரு ஈஸ்வரியாக நடித்த பிக்பாஸ் அர்ச்சனா! உண்மையான ஈஸ்வரியின் கமென்ட் என்ன தெரியுமா?

Published on: January 2, 2024
arch
---Advertisement---

BiggBoss Archana: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ரிடியாக உள்ளே நுழைந்தவர் அர்ச்சனா. வந்த முதல் நாளில் ரசிகர்களின் எரிச்சலை சம்பாதித்த அர்ச்சனா அடுத்த வாரத்தில் இருந்தே எரிமலை வெடித்ததை போல் பொங்கி எழுந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.

நாளுக்கு நாள் ரசிகர்களின் அன்பை பெற்ற அர்ச்சனா வோட்டிங்கிலும் முதலிடத்தையே பெற்று வந்தார். அதன் காரணமாகவே எலிமினேட் லிஸ்ட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் அர்ச்சனா காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் அர்ச்சனா திமிரு படத்தில் நடித்த ஈஸ்வரி கதாபாத்திரத்தை ரி கிரியேட் செய்து நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: இயக்குனருடன் போட்ட சண்டை… ஜனகராஜை கமல் ஒதுக்கியதற்கு காரணம் இதுதானாம்!..

இவரின் நடிப்பை பார்த்து உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களே பார்த்து வாயடைத்து நின்றனர். அந்த டாஸ்க் முடியும் வரை ஈஸ்வரி கதாபாத்திரத்திலேயே இருந்து மெய்சிலிர்க்க வைத்தார். மேலும் மதுரை தமிழில் பேசி ரசிக்கவும் வைத்தார்.

இதனால் அந்த டாஸ்க்கில் அவருக்கு அதிக பாய்ண்ட்கள் கிடைத்தன. இந்த நிலையில் திமிரு படத்தில் ஒரிஜினல் ஈஸ்வரியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி சமீபத்தில் அர்ச்சனாவின் ஆக்டிங்கை பற்றி பேசியிருக்கிறார். அவரிடம் இதை பற்றி தொகுப்பாளர் கேட்க,

இதையும் படிங்க: நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..

அதற்கு பதிலளித்த ஸ்ரேயா ரெட்டி ‘ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். அர்ச்சனா நன்றாக நடித்திருக்கிறார் என்று. ஆனால் இன்னும் டிவியில் அவர் நடிப்பை பார்க்கவில்லை. பார்க்கிறேன்’ என்று கூறினார். திமிரு படத்தில் அதுவும் ஒரு லேடி ஆர்ட்டிஸ்டிடம் இருந்து அப்படி ஒரு வில்லத்தனத்தை நாம் பார்த்திருக்கவே முடியாது. வில்லனாக நடித்த நடிகர்களை எல்லாம் ஓவர் டேக் செய்து அசத்தியிருப்பார் ஸ்ரேயா ரெட்டி.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.