இந்த பட்ஜெட்டுக்கு இப்படினா? 50கோடி கொடுத்தா தமிழில் ஒரு பாகுபாலியை காட்டிருவாங்க – சிவகார்த்திகேயன் பாராட்டிய படம்

Published on: January 2, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது ஒரு மாஸ் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்து படங்களில் நடிகர் சூரியுடனேயே நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு குழந்தை ரசிகர்கள் அதிகமானார்கள்.

அதன் பின் குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக உயர்ந்தார். இன்று விஜய்க்கு அடுத்த படியாக அனைத்துதரப்பினரும் விரும்பப்படும் ஒரு நடிகராக வளர்ச்சி பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் எழுந்தாலும் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் தன் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க: திமிரு ஈஸ்வரியாக நடித்த பிக்பாஸ் அர்ச்சனா! உண்மையான ஈஸ்வரியின் கமென்ட் என்ன தெரியுமா?

அவரின் நடிப்பில் பொங்கலுக்கு அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது. இப்போது அயலான் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

அவ்வப்போது சில தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வரும் சிவகார்த்திகேயனின் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாக தெரிகிறது. மெச்சூரிட்டி,காஸ்டியூம்ஸ்,உடை என அனைத்திலும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இயக்குனருடன் போட்ட சண்டை… ஜனகராஜை கமல் ஒதுக்கியதற்கு காரணம் இதுதானாம்!..

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தை பற்றி மிகப்பெருமையாக பேசியிருக்கிறார். போன வருடம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற பல திரைப்படங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ‘யாத்திசை.’ வரலாற்றுத் திரைப்படமாக வெளியாகிய யாத்திசை திரைப்படத்தை தரணி ராஜேந்திரன் இயக்கினார்.

இந்த குறைவான பட்ஜெட்டில் இவ்ளோ பிரம்மாண்டத்தை தரணியால் கொடுக்க முடிந்தது என்றால் அவரிடம் 50 கோடி கொடுத்தால் தமிழ் சினிமாவில் இன்னொரு பாகுபாலியை அவரால் கொண்டு வந்திருக்க முடியும்.அந்தளவுக்கு படம் கமெர்ஷியலாக ஹிட் அடித்த படமாக அமைந்தது என சிவகார்த்திகேயன் கூறினார்.

இதையும் படிங்க: நான்லாம் உலக நாயகன் இல்ல!.. அவங்கதான்!.. கமல்ஹாசன் பட்டியலிட்ட திரை பிரபலங்கள்!..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.