அட்லீ விஷயத்தில் கோடம்பாக்கம் செய்யும் தவறு! அவங்க பண்றத நாம் ஏன் பண்ணக் கூடாது? ஐய்யா SK என்ன சொல்றீங்க?

Published on: January 3, 2024
siva
---Advertisement---

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சின்னத்திரையில் தன் கெரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் கிடைத்த மக்கள் வரவேற்பால் வெள்ளித்திரையில் காலெடி எடுத்து வைத்தார்.

அதுவும் தனுஷால் அவர் நடித்த மூணு என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதுமட்டுமில்லாமல் மெரினா என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்க கூடிய வாய்ப்பு தனுஷால்தான் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி!. வெளியான வீடியோவால் ஹேஷ்டேக்கில் வந்த தலைவர்…

அதிலிருந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனை மக்கள் மிகவும் நேசிக்க ஆரம்பித்தார்கள். தன் வீட்டுப் பிள்ளையாகவே பார்க்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்திற்கு பிறகு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகும் படம் அயலான். இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் அட்லீயை பற்றிய சுவாரஸ்யமான தகவலை சிவகார்த்திகேயன் கூறினார்.

இதையும் படிங்க: கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

அதாவது அட்லீ மிகச்சிறந்த இயக்குனர். அவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அவரால் பல கோடிக்கு வசூலாகும் ஒரு படத்தை கொடுக்க முடிகிறது அல்லவா? படத்தை காப்பி அடிக்கிறார், ரிமேக் செய்கிறார் என்று பேசினாலும் அதையும் மீறி இந்தளவு வசூல் படங்களை கொடுக்க முடிகிறது.

மற்ற இயக்குனர்கள் செய்கிறார்களா? இன்றைக்கும் அட்லீயும் விஜயும் சேர்ந்தால் அந்தப் படம் மிகப்பெரிய வசூலாகின்றன என்றால் அவருடைய திறமைதான். இங்கிருந்து  போய் பாலிவுட்டில் 1500 கோடி வரைக்கும் ஒரு படத்தை வசூல் வேட்டையில் ஓட வைத்திருக்கிறார் அட்லீ.

இதையும் படிங்க: இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

அவரை இங்கு இருக்கும் யாரும் கொண்டாடவில்லை. ஆனால் பாலிவுட்டில் இருக்கும் அனைவரும் அட்லீயை கொண்டாடி வருகிறார்கள் என்று அட்லீயை பற்றி சிவகார்த்திகேயன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.