Cinema News
காக்கா கழுகு கதை சொல்லும் நடிகர்கள் மத்தியில் கெத்து காட்டிய தனுஷ்! பேசியதை கேட்டா ஆச்சரியப்படுவீங்க
Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு ஆகச்சிறந்த நடிகராக உருவெடுத்துக் கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ். நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் அவர் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் விழா நடைபெற்றது. வழக்கம் போல தன் மகன்களுடன் ஆஜரானார் தனுஷ்.
அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி பெரிய விழாக்கள் என்றால் தனுஷ் பாரம்பரிய உடையான வேட்டை சட்டி அணிவதுதான் வழக்கமாக கொண்டிருக்கிறார். அதே போல்தான் நேற்றும் வேட்டி சட்டையுடன் வந்திருந்தார். தன் இருபக்கமும் இரு பில்லர்களாக தன் இருமகன்களுடன் நடுவே உட்கார்ந்திருந்தார் தனுஷ்.
இதையும் படிங்க: சண்டையே போடாமல் ஸ்ருதிக்கு பல்ப் கொடுத்த முத்து!… காண்டான விஜயா.. நல்லா தான் இருக்குப்பா!..
மேடையில் தனுஷை பேச அழைக்கும் போது மேடைக்கு வந்த தனுஷ் முதலில் கேப்டன் விஜயகாந்திற்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் தன் பேச்சையே ஆரம்பித்தார். தனுஷ் வாழ்க்கையிலும் கேப்டன் ஒரு முக்கிய அங்கமாகத்தான் இருந்திருக்கிறார்.
அனைவருக்கும் தெரிந்த பழக்கப்பட்ட பழமொழியான சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியை மேற்கோள் காட்டி ஆரம்பத்தில் இருந்து நான் சேர்த்த சிறு துளிகள் எல்லாம் இன்று பெரிய வெள்ளம் போல் ஒன்று சேர்ந்து நிற்பதை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என ரசிகர்களை சுட்டிக் காட்டி பேசினார். அதன் பின் கேப்டன் மில்லர் படத்தையும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பற்றியும் மிகவும் பெருமையாக பேசினார்.
அருண் மாதேஸ்வரனை பார்க்கும் போது வெற்றிமாறனை பார்த்தாற் போல் எனக்கு தோன்றும் என்றும் கூறினார். முதலில் அருண் மாதேஸ்வரனா இந்தப் படத்தை எடுக்கப் போறது என்று உள்ளுக்குள் ஒரு சின்ன தயக்கம் இருந்தது. ஆனால் இது சம்பவம் பண்ற கை என்று போக போகத்தான் தெரிந்தது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பாண்டிச்சேரியில இருந்துட்டு விஜயகாந்த் மறைவுக்கு வர முடியாதா?.. பெரிய கும்பிடு போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!..
ஹேட்டர்ஸ்கள் நாம் என்ன செய்தாலும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஒரு வேளை நாம் செய்தது நல்லதாகவே இருந்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் ஒரு சுதந்திரமா? என்னை பொறுத்தவரைக்கும் சுதந்திர துஷ்பிரயோகம் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஷிவ்ராஜ் குமாரும் நடித்திருப்பதால் அவரும் வந்து பேசியிருக்கிறார்.
அவரை குறிப்பிட்டும் தனுஷ் ‘அவர் சிரிக்கும் போது அவரின் தந்தையை பார்க்கிறேன். தம்பியையும் பார்க்கிறேன். உங்கள் அப்பா பெயரை உங்களை தவிற யாராலும் காப்பாற்ற முடியாது ’ என்று பெருமையுடன் கூறி உங்களை இப்பொழுது பார்க்கும் என் மகன்களும் இதை கற்றுக் கொள்வார்கள் என்று மெய்சிலிர்க்க கூறினார்.
இதையும் படிங்க: திரிஷா, தனுஷ் பற்றி மேடையில் கூல் சுரேஷ் என்ன சொன்னார் தெரியுமா?.. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்பீச்!..
வயதில் சிறியவராக இருந்தாலும் தனுஷ் பேச்சில் ஒரு பக்குவம் இருப்பதை பார்க்க முடிந்தது. ரஜினி, விஜய் மாதிரி மாறி மாறி அடைமொழி பெயர்களை வைத்து சண்டை போடுவதை விட்டு இந்த மாதிரி மற்றவர்களுக்கு உதவும் வகையில் நல்ல ஒரு கருத்தை சொல்லிவிட்டு போவதுதான் நல்லது.