Cinema News
தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்!.. ப்ரீ ரிலீஸ் பிசினஸில் முந்தும் அயலான்.. கேப்டன் மில்லர் கதி என்ன?
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. சினிமாவில் தன்னை 3 படத்தில் காமெடியனாக அறிமுகப்படுத்தி பின்னர் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக உயர்த்திய தனுஷுக்கு எதிராக இந்த முறை களம் காணுகிறார்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்துடன் ரசிகர்கள் முதலில் பார்க்க விரும்பும் படமாக அயலான் படம் தான் உள்ளது. தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் படத்துக்கு பிறகு இப்போ தான் ஒரு ஏலியன் படம் முதன்முதலாக வருகிறது.
இதையும் படிங்க: 6 மாசமா அவஸ்த்தைப் படுறான்.. ஒண்ணும் வர மாட்டேங்குது.. இசையமைப்பாளர்களை கலாய்த்த இளையராஜா!
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் அந்த ஏலியனுக்கு சித்தார்த் குரல் என காம்பினேஷனே என்டர்டெயின்மென்ட்டாக உள்ள நிலையில், குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் பொங்கலுக்கு அயலான் படத்தை பார்க்கத்தான் மக்கள் விரும்புவார்கள் என நினைத்த பல விநியோகஸ்தர்கள் அயலான் படத்தை அதிக தொகைக்கு வாங்கி பல திரையரங்குகளில் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இதற்கு முன்னதாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கி இருந்தார். இரண்டு படங்களிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள், பலாத்கார காட்சிகள் என அதிகம் இருந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்துக்கும் ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் நிலை உள்ளதாம்.
இதையும் படிங்க: இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!
அயலான் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், மேலும், ரசிகர்களை கவரும் விதமாக இருந்தால் கேப்டன் மில்லருக்கு சிக்கல் தான் என்றும் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் என வெயிட்டான காஸ்டிங் இருக்கும் நிலையில், இந்த பொங்கலுக்கு இரண்டில் எந்த படம் வசூலில் முதலிடத்தை பிடிக்கப் போகிறது என்பதை காண திரையுலகமே காத்திருக்கிறது.
ப்ரீ ரிலீஸ் பிசினஸிலேயே அயலான் திரைப்படம் 40 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். கேப்டன் மில்லர் 25 முதல் 30 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.