இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!

by Saranya M |   ( Updated:2024-01-04 15:23:55  )
இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!
X

நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் மருத்துவமனையில் இருந்த போது கூட நடிகர்கள் பலர் அவருக்கு விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என ஒரு ஆறுதல் ட்வீட் கூட போடவில்லை. அதே போல விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. ஆனால், தற்போது அவரது சமாதிக்கு வந்து ஒவ்வொருவராக டிராமா ஆடுகின்றனர் என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் எல்லாம் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மநிம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: காதலியும், மனைவியும்… காதலுக்கு மரியாதை கிளைமேக்ஸில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா!..

பல நடிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று காலை நடிகர் சிவகுமார் மற்றும் அவரது மகன் கார்த்தி தேமுதிக அலுவலகத்துக்கு வந்து விஜயகாந்த் சமாதி முன்பு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தற்போது நடிகர் அருண் விஜய் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளார்.

அடுத்து விஷால், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலங்கள் அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் குறை சொல்லும் ப்ளூ சட்டை மாறன் அஞ்சலி செலுத்தினாலும் இப்படி மோசமாக விமர்சிப்பது சரியல்ல என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?

அதில், தற்போது உச்சகட்டமாக, ”விஜயகாந்த் சமாதில வந்து சாவகாசமா பெர்ஃபார்ம் பண்ற நடிப்பை ஊர் நம்பாதுடா. அடுத்து எவன் வர்றான்னு பாப்போம்..” என பதிவிட்டு செருப்பால் அடிக்கும் போட்டோவையும் வெளியிட்டு எல்லை மீறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Next Story