வடிவேலுவை திட்டுற உரிமை அந்த ஒரு நடிகருக்குத்தான் உண்டு! வேற எவனுக்கும் இல்ல – பகீர் கிளப்பிய காமெடி நடிகர்

Published on: January 6, 2024
vadi
---Advertisement---

Actor Vadivelu: தமிழ் சினிமாவில்  நகைச்சுவையில் சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு மாமன்னன் என்ற படத்தில் குணச்சித்திர வேடமேற்று அனைவரையும் அசற வைத்தார்.

இரண்டாண்டு இடைவெளியில் இருந்த வடிவேலு அதன்பின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனை அடுத்து வெளியான படம்தான் மாமன்னன்.

இதையும் படிங்க: என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..

இதில் வடிவேலுவை பற்றி பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்க விஜயகாந்த் மறைவிற்கும் அவர் வரவில்லை. அதனால் வடிவேலுவை பற்றி கண்டபடி சமூக வலைதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் பேசி வந்தார்கள். வடிவேலுவின் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தவர் கேப்டன்.

என்னதான் பிரச்சினை இருந்தாலும் வந்து பார்த்திருக்கலாம் என்று அவரை திட்டி வந்தார்கள். இந்த நிலையில் காமெடி நடிகர் ஜெயமணி  கூறியதாவது: எங்க போகனும் வரனும் என்பது அவரவர் விருப்பம். அதுவும் விரோதிகள் வீட்டிற்கு யாராச்சும் போவாங்களா? அதுவும் இந்த யுடியூப் சேனல்ஸ் எல்லாம் சேர்ந்து வடிவேலுவை பற்றி இப்படி சொல்வது வருத்தமளிக்கிறது.

இதையும் படிங்க: கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

எனக்கும் வடிவேலுவுக்கும் கூட பிரச்சினை இருந்தப்போ கேப்டன்தான் பேசி தீர்த்துவைத்தார். அதன் பின் இருவரும் நண்பர்களானோம். ஆனால் கேப்டனுடன் அந்த பிரச்சினைக்கு அப்புறம் வடிவேலு பேசவே இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி போவார்? ஆனால் ஒரு இரங்கல் வீடியோ அனுப்பியிருக்கலாம். அதை செய்யவில்லை. ஆனால் வடிவேலுவை திட்டுகிற உரிமை ஒரே ஒரு நடிகருக்குத்தான் இருக்கிறது. அது ராஜ்கிரண் மட்டும்தான். வேறு எவனுக்கும் உரிமை இல்லை.

மேலும் கூட நடிக்கு சக நடிகர்களும் அவரை பற்றி கடுமையாக பேசி வருகிறார்கள். அதற்கு காரணம் வடிவேலு இப்போது மார்கெட் இல்லாமல் இருப்பது. ஒரு வேளை முன்பு மாதிரி நல்ல மார்கெட்டுடன் இருந்திருந்தால் அவர்கள் அப்படி பேசியிருக்கவே மாட்டார்கள். இத்தனை நாளாக ஒரு விஷத்தை கக்குற பாம்புக்குத்தான் வடிவேலு பாலூட்டி வளர்த்து வந்திருக்கிறார் என்பது அவர்கள் பேசும் போதே தெரிகிறது என்று அந்த நடிகர் கூறினார்.

இதையும் படிங்க: 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.