என்னமோ செய்யப்போறாங்க!. துபாயில் பரிதாபங்கள் கோபி – சுதாகருடன் சிவகார்த்திகேயன்!. வைரல் வீடியோ..

Published on: January 5, 2024
sivakarthikeyan
---Advertisement---

Ayalan movie: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்தியேன். துவக்கத்தில் தடுமாறினாலும் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாறினார்.

குறுகிய காலகட்டத்திலேயே விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அதாவது, விஜய், அஜித்துக்கு பின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார். ஆனால், இவரின் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்து நஷ்டமடைந்தார். அதற்கு காரணம் இவரே அந்த படங்களை தயாரித்ததுதான்.

இதையும் படிங்க: கேப்டன் சினிமாவில் நிலைத்து நின்றதற்கு இதுதான் காரணமா? இளரவசு சொல்லும் ரகசியம்…!

ஆனாலும், அவ்வப்போது ஹிட் படங்களை கொடுத்து மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டு வருகிறார். ஒருபக்கம், இமானின் குற்றச்சாட்டுக்கும் ஆளாகி அவரின் இமேஜ் டேமேஜ் ஆனது. ஆனால், இதுவரை அதுபற்றி சிவகார்த்திகேயன் எந்த விளக்குமும் கொடுக்கவில்லை. இந்நிலையில்தான், அவரின் அயலான் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

ayalan

எனவே, இப்படத்தின் புரமோஷன் வேலைகள் துவங்கியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்தால் இமான் சொன்ன புகார் பற்றி கண்டிப்பாக கேள்விகள் கேட்பார்கள் என்பதால் அதை அவர் தொடர்ந்து தவிர்த்து வருகிறார். அயலான் படத்தி இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க: 25 வருடமாக கேப்டன் நினைவாக சூர்யா செய்யும் செயல்! இதுவரைக்கும் தெரியாத ஒரு விஷயம்

மேலும், ரகுப் ப்ரீத் சிங், கருணாநகரன், யோகிபாபு என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பூமிக்கு வரும் ஏலியன் ஒன்று சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடைய அவர் அந்த ஏலியனை வைத்து என்ன செய்கிறார் என்பதுதான் கதை. இப்படத்தின் டீசர் வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், துபாயில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவிருக்கிறார். அதோடு, பரிதாபங்கள் புகழ் கோபி – சுதாகருடன் இணைந்து அயலான் படத்திற்கு அவர் புரமோஷன் செய்யவிருக்கிறார். இதற்காக துபாய் சேக் போல் கோபியும், சுதாகரும் உடையணிந்து சிவகார்த்திகேயனுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.