Connect with us

Bigg Boss

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் காலியான போட்டியாளர்!… பிக்பாஸ் சீசன் 7ல் டிவிஸ்டுக்கு மேல் டிவிஸ்ட்டா?

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வார எவிக்‌ஷன் குறித்த தகவல்கள் கசிந்து இருக்கும் நிலையில் அது பலருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தும் இவங்க செஞ்சதுக்கு இந்த வெட்டு தேவை தான் என்ற குரலும் சமமாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஆரம்பத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் ரொம்பவே மொக்கையாக போன சீசன் இது என்று தான் சொல்லவேண்டும். ரொம்பவே காத்து வாங்கியது டாஸ்குகளே இல்லாமல் கிட்டத்தட்ட வெட்டிக்கதை பேசியே 100 நாட்களை ஓட்டிவிட்டனர்.

இதையும் படிங்க: விஜய் டிவி புகழ் அமுதவாணனுக்கு மனைவி கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்! என்ன ஒரு ஆனந்தம்? வைரலாகும் புகைப்படம்

இந்த சீசனில் தான் அதிக நெகட்டிவிட்டி, பொறாமை என அனைத்து தலைவிரித்து ஆடியது. பெண்களே சேர்ந்து அடித்த கூத்தில் புல்லி கேங் என பிரபலங்களே சொல்லும் நிலையில் இருந்தனர். வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப்பை ரெட் கார்ட் கொடுக்க வைத்து வெளியேறினார்கள். இப்போ போவார் அப்போ போவார் என எதிர்பார்க்கப்பட்ட பூர்ணிமா எடுக்க போகிறார் எனத் தெரிந்தும் பணப்பெட்டியை 16 லட்சம் வரை அதிகரித்தனர்.

இப்படி நிறைய சொதப்பல்கள் நடந்தது. இந்த வாரம் மாயா, விஜய் தான் ஹாட் சீட்டில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட மாயா வெளியேறுவார் என பலரும் ஆவலுடன் காத்திருக்க அதற்கு கமல் மறுப்பு தெரிவித்ததாக வேறு ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: கோட் படம் காப்பி அடிக்கும் அந்த ஜெமினி மேன் படக்கதை தெரியுமா? அட கேட்கவே செம மாஸா இருக்கே!

அர்ச்சனாவிடம் சண்டைக்கு நின்றார். தேவையே இல்லாமல் இவரின் இந்த வேலையால் இந்த வாரம் அவர் தான் எலிமினேட் ஆகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த எலிமினேஷன் ஞாயிறு நடக்கும் எபிசோட் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.

Continue Reading

More in Bigg Boss

To Top