Connect with us
amuth

Cinema News

விஜய் டிவி புகழ் அமுதவாணனுக்கு மனைவி கொடுத்த சர்பரைஸ் கிஃப்ட்! என்ன ஒரு ஆனந்தம்? வைரலாகும் புகைப்படம்

Amuthavanam: விஜய் டிவியில் நகைச்சுவை  நடிகராக இருப்பவர் நடிகர் அமுதவாணன். அது எது இது, கலக்க போவது யாரு சாம்பியன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன் நகைச்சுவை திறமையால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அமுதவாணன் என்று சொன்னாலே நம் நியாபகத்துக்கு வருவது ‘சிரிச்சாப் போச்சு’ நிகழ்ச்சிதான். அதுவும் வடிவேல் பாலாஜியுடன் இணைந்து அவர் செய்த அட்டகாசம் இதுவரை யாராலும் மறக்க முடியாது. நகைச்சுவை மட்டுமில்லாமல் மிமிக்ரி செய்வதிலும் சிறந்தவர் அமுதவாணன்.

இதையும் படிங்க: சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

ஒரு சமயம் நடிகர் ராமராஜன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராமராஜனை போன்றே வேடம் இட்டு அவர் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி ராமராஜனை மிகவும் கவர்ந்தார். கவர்ந்தது மட்டுமில்லாமல் அமுதவாணனுக்கு பரிசாக தன் கையில் அணிந்திருந்த ஒரு தங்க மோதிரத்தையும் ராமராஜன் அன்பளிப்பாக கொடுத்து விட்டு சென்றார்.

amu

amu

அதே போல் சத்யராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் சத்யராஜை போலவே நடித்து அவரின் நன் மதிப்பை பெற்றார் அமுதவாணன். சின்னத்திரை  மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: அவனுங்களுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்காதீங்க!.. தயாரிப்பாளரிடம் சில்ற புத்தியை காட்டிய வடிவேலு!..

தார தப்பட்டை படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை பாலா அமுதவாணனுக்கு கொடுத்து நல்ல ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தார். அதற்கேற்றாற்போல சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தினார் அமுதவாணன்.

இந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமுதவாணன் பாலாவுடன் இணைந்து மிகப்பெரிய உதவிகளை செய்தார். இதன் காரணமாகவோ என்னமோ அமுதவாணனின் மனைவி அவருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக ராயல் என்ஃபீல்ட் பைக்கை பரிசாக வழங்கியிருக்கிறார். இதை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்ததோடு தன் மனைவிக்கும் நன்றியை தெரிவித்திருக்கிறார் அமுதவாணன்.

இதையும் படிங்க: வேற மொழிப்படங்களா?.. நோ நோ.. தமிழ்ப்படங்களில் மட்டுமே கெத்து காட்டிய நடிகர்கள்…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top