நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யவான் சாவித்திரி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிரான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக சாருகேஷ் நடித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் ஹார்ட் பீட் வெப் சீரிஸில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும், இப்படத்தில் பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
முதலில் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், டீசரில் கீர்த்தி சுரேஷுக்கு மிஷ்கினுடனான மோதலை காமெடி டோனில் கொடுத்து ரசிக்க வைத்துள்ளனர்.







